'மகன் கூட +2 பரீட்சை எழுதிய அப்பா, அம்மா...' கத்துக்க வயசெல்லாம் ஒரு மேட்டரே கிடையாது...' அடுத்தது எங்க டார்கெட் என்ன தெரியுமா...? - அசத்தும் குடும்பம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள தம்பதிகள் தன் மகனோடு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வெழுதி தேர்ச்சிப் பெற்ற சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

படிப்பதற்கும், புதிய திறமைகளை கற்றுக்கொள்வதற்கு வயது தேவை இல்லை. முயற்சியும் தன்னம்பிக்கையே போதும் என பெரியோர் வாக்கினை நிருபித்துள்ளனர் கேரளாவை சேர்ந்த முஸ்தபாவும் அவரது மனைவி நுஸைபா.
கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபரான 43 வயதான முஹம்மது முஸ்தபா. இவருக்கும் நுஸைபா என்ற மனைவியும், 12-ம் வகுப்பு படிக்கும் சம்மாஸ் மகனும் உள்ளனர். பல ஆண்டுகளுக்கு முன்பு முஸ்தபாவிற்கு அவரது வீட்டார், ப்ளஸ் டூ படித்துக்கொண்டிருந்த மாணவியான நுசைபாவை திருமணம் செய்து வைத்துள்ளனர்.
10வகுப்பு முடித்து துபாய் சென்று பணம் சம்பாதித்து கேரளாவில் தொழிலதிபரான போதும் தன் வாழ்வில் ஒன்றை இழந்ததாகவே கருத்தியுள்ளார் முஸ்தபா. திருமணம் நடந்து பல ஆண்டுகள் ஆகியும் தன் மனைவியின் படிப்பை கெடுத்து விட்டோம் என முஸ்தபாவிற்கு உறுத்த தொடங்கியுள்ளது.
இது குறித்து கூறிய முஸ்தபா, 'நான் 10-ம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்தியவன் என்றாலும் என் மனைவிக்கு படிப்பதில் ஆர்வம் அதிகம். அதனால், மனைவியின் கவலையைப் போக்குவதோடு நானும் ப்ளஸ் டூ தேர்வு எழுத முடிவெடுத்து பயிற்சி மையங்களை அணுகத் தொடங்கினேன்.' எனக்கூறினார்.
ஆனால், பயிற்சி மையங்கள் அவர்களுக்கு கைகொடுக்கவில்லை. அந்நேரத்தில், கேரள எழுத்தறிவு மையத்தின் சமநிலைத் தேர்வுகள் குறித்து தங்கள் ஊரின் பஞ்சாயத்து அலுவலகத்தில் வைத்திருந்த அறிவிப்பு பலகையைப் பார்த்து அதுகுறித்து விசாரித்து உள்ளார். இந்த வாய்ப்பை தவற விடக்கூடாது என நினைத்து அவரும், அவரின் மனைவியும் 12-ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர். இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் இந்த ஆண்டு தான் அவரின் மகனும் 12-ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். அம்மா, அப்பா மற்றும் மகன் என குடும்பமாக 12-ம் வகுப்பு தேர்வு எழுதிய பெருமை முஸ்தபா குடும்பத்திற்கே சேரும்.
'இந்த வயதில் படிக்கிறோமே என்று ஆரம்பத்தில் கொஞ்சம் கூச்சப்பட்டோம். ஆனால், இப்போது தேர்ச்சி அடைந்ததால் எல்லோரும் பாராட்டுவதைப் பார்த்து இனி வெட்கப்பட கூடாது என்று முடிவு செய்து பட்டப்படிப்பை தொடர உள்ளோம்' என தேர்ச்சியான சந்தோஷத்தில் கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் 12ஆம் வகுப்பு தேர்வில் முஸ்தபா முதல் வகுப்பிலும், அவரது மனைவி நுஸைபா 80% தேர்ச்சி விகிதத்துடன் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மற்ற செய்திகள்
