மணமகன், மணமகள் உட்பட 'மொத்தம்' 43 பேருக்கு இருக்கு... குற்றம் நிரூபிக்கப்பட்டா 2 வருஷம் 'ஜெயில்' கன்பார்ம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதொற்று நோய்த்தடுப்பு சட்டத்தை மீறியதற்காக திருமண வீட்டார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் மணமகன், மணமகள் உட்பட 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 17-ம் தேதி நடைபெற்ற திருமணம் ஒன்றில் 100 பேருக்கு அதிகமானோர் கலந்து கொண்டது அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இதையடுத்து மணமகன் உட்பட திருமணத்தில் கலந்து கொண்ட 128 பேருக்கு பரிசோதனை நடத்தியதில் 43 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் டி.சஜித் பாபு, தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தை மீறி திருமணத்தில் அதி்கமானோரைப் பங்கேற்க வைத்துள்ளதால், திருமண வீட்டார் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. திருமண வீட்டார் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்து இருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மற்ற செய்திகள்
