'கணவருக்கு தெரியாமல் வீட்டு மாடியிலேயே'... 'மனைவி செய்துவந்த ரகசிய வேலை'... 'சென்னையில் கொள்ளை புகாரால் வெளிவந்த பகீர் சம்பவம்!'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Aug 10, 2020 02:23 PM

'சென்னையில் கணவர் கொள்ளை புகார் அளித்தபோது மனைவி ரகசியமாக பாலியல் தொழில் செய்துவந்ததை அறிந்து அதிர்ந்துபோயுள்ளார்.

Chennai Wifes Sex Business Came To Light After Robbery

சென்னையை அடுத்த செங்குன்றம் பாடியநல்லுர் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவருடைய வீட்டில் கடந்த 5ஆம் தேதி பைக்கில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் ஒன்று கத்தி முனையில் மிரட்டி நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளது. இதுகுறித்து குமார் செங்குன்றம் போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்ததில், கொள்ளையர்களின் இருசக்கர வாகனங்கள் செங்குன்றத்தில் இருந்து புறப்பட்ட தண்டையார்பேட்டை வரை சென்றது சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இதையடுத்து கொள்ளையில் ஈடுபட்ட வியாசர்பாடியைச் சேர்ந்த 32 வயதான ரகு என்பவர் மற்றும் அவருடன் இருந்த கும்பல் தொடர்பான விவரங்ககள் கிடைத்ததும், செல்போன் சிக்னல் மூலம் அவர்கள் பதுங்கி இருந்த இடத்தை போலீசார் சுற்றி வளைத்து அவர்களை பிடித்துள்ளனர். பின்னர் அவர்களிடம் கொள்ளை குறித்து விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணையில், குமாரின் இரண்டாவது மனைவி கணவருக்கு தெரியாமல் வீட்டின் மாடியில் உள்ள கூரை வீட்டில் வைத்தே ரகசியமாக பாலியல் தொழில் செய்து வந்ததும், லாரி ஓட்டுநரான குமார் வெளியூர் செல்லும் நேரத்தில் வாடிக்கையாளர்களை வீட்டுக்கு வர வைத்ததும் தெரியவந்துள்ளது. இதற்காக சில பெண்களை உறவினர்கள்போல் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது அங்கு அடிக்கடி வந்து சென்றதால் குமாரின் மனைவி பாலியல் தொழில் செய்து அதிக அளவில் பணம் வைத்திருப்பதை அறிந்த ரகு, கூட்டாளிகளுடன் சேர்ந்து நகை, பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் குமாரின் மனைவி சட்டவிரோத செயலில் ஈடுபடுவதால், போலீசில் புகார் அளிக்க மாட்டார் என நினைத்து செய்ததாகவும், இதுகுறித்து எதுவும் தெரியாத குமார் போலீசில் புகார் அளித்ததால் தாங்கள் சிக்கிக்கொண்டதாகவும் ரகு கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து குமார் வீட்டில் கொள்ளையடித்த ஏழரை சவரன் தங்க நகை, வெள்ளி கொலுசு, 3 செல்போன்கள், கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து, அவர்களை சிறையில் அடைத்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chennai Wifes Sex Business Came To Light After Robbery | Tamil Nadu News.