'நல்லா வாழ்ந்த மனுஷன்...' '3 கோடி சொத்துக்காக அப்பாவை தெருவில் தள்ளிய 3 மகன்கள்...' அதோட விடல...' - கண்ணீரோடு தவிக்கும் தந்தை...!
முகப்பு > செய்திகள் > இந்தியாதெலுங்கானா மாவட்டத்தில் 79 வயதான தந்தையிடம் இருந்து 3 கோடி சொத்தை அபகரித்துக்கொண்டு தெருவில் விட்ட 3 மகன்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் சிதிப்பேட் மாவட்டத்திலுள்ள மதிரா என்ற கிராமத்தில் வசித்து வருபவர் 79 வயதான முதியவர் போதுமல்லையா. இவருக்கு போது சுதாகர் (45), போது ஜனார்தன் (48) மற்றும் போது ரவீந்தர் (52) என மூன்று மகன்கள் உள்ளனர். மேலும் வசதியாக வாழ்ந்து வந்த போதுமல்லையா தன் மனைவி இறந்ததில் இருந்து மகன்களிடம் கொடுமைகளை அனுபவித்து வந்துள்ளார்.
மேலும் தன் அம்மாவின் தங்கம், வெள்ளி நகைகளையும் அபகரித்து கொண்டும், தந்தையின் மூன்று கோடி ரூபாய் சொத்தை பறித்துக்கொண்டும் அவரை ஆதரவின்றி தெருவில் தவிக்க விட்டுள்ளனர்.
பணக்காரராக வாழ்ந்த போதுமல்லையா தற்போது தெருவில் வசித்து வருவதால் உடல் பாதிக்கப்பட்டு வருகிறார். மேலும் அப்பகுதி கிராம மக்களே அவருக்கு நிலையில் உணவளித்து வருகின்றனர்.
மேலும் அவரின் மூன்று மகன்களில் ஒருவர் தன் தாய் மீதுள்ள ஆறு ஏக்கர் நிலத்தை எழுதி வாங்குவதற்காக வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் போதுமல்லையா நிலையினை சகிக்க முடியாத அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகார் அளித்துள்ளனர்.
அதை தொடர்ந்து, மதீரா கிராம வருவாய் அதிகாரி (வி.ஆர்.ஓ) கோஹேடா போலீசுக்கு எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலன்புரி சட்டம் 2007, பிரிவு (24) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு (420) (மோசடி) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் போதுமல்லையாவின் 3 மகன்களையும் கைது செய்துள்ளனர்.