'ஒரு வண்டி கூட இன்னும் ஓடலியே...' 'கட்டி ஓப்பன் பண்றதுக்குள்ள...' - சுக்கு நூறாக உடைந்த பாலம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்தியப்பிரதேசத்தில் ரூ.9 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் திறக்கும் முன்பே இடிந்து விழுந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் கரையோர மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு நிறைந்த இடத்தில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் வெயின்கங்கா ஆற்றின் மீது மக்களுக்கு பயன்படும் வகையில் சுமார் ரூ.9 கோடி செலவில் பாலம் ஒன்று கட்டப்பட்டுதுள்ளது. மேலும் தற்போது கொரோனா ஊரடங்கு சமயம் என்பதால் பாலம் திறக்கும் பணியானது தள்ளி வைக்கப்பட்டிருந்து.
இந்நிலையில் தற்போது பெய்த கனமழையால், புதியதாக கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி முழுவதும் இடிந்து விழுந்துள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த கியோலரி தொகுதி எம்.எல்.ஏ. ராகேஷ் பால், 'கனமழை காரணமாக ஆற்றில் ஓடும் நீர் அழுத்தம் அதிகரித்து பாலத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது' எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
