‘வேற லெவல் ஓடிடி சலுகைகள்!’.. ஜியோ பிராட்பேண்ட் பயனாளர்களுக்கான அதிரடி ஆஃபர்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாரிலையன்ஸ் ஜியோ பைபர் பிராட்பேண்ட், அன்லிமிட்டெட் இணையதள சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டங்களின் மூலம் வரம்பற்ற இணைய சேவையை, சமச்சீரான வேகத்தில் பெற முடியும் என்பதும் 12 ஓ.டி.டி., (OTT) தளங்களுக்கான சந்தாவையும் பெற முடியும் என்பதும்தான் தற்போதைய முக்கிய தகவல். அதன்படி, ரூ.399 திட்டத்தில், 30 Mbps வேகத்தில் அன்லிமிட்டெட் இணையதள மற்றும் வாய்ஸ்கால் வசதியும், ரூ.699 திட்டத்தில், 100 Mbps வேகத்தில் அன்லிமிட்டெட் இணையதள மற்றும் வரம்பற்ற வாய்ஸ்கால் வசதியும் பெற முடியும்.
இதேபோல் ரூ.999 திட்டத்தில் வரம்பற்ற இணையத்தை 150 Mbps வேகத்துடனும், வாய்ஸ்கால் வசதியுடனும் சேர்த்து, 11 ஓ.டி.டி., தள பயன்பாடுகளுக்கான சந்தாவும் கூடுதலாக தரப்படுகிறது. கொஞ்சம் மேலே போய், ரூ.1,499 க்கு ரீசார்ஜ் செய்தால், வாடிக்கையாளர்கள் வரம்பற்ற வாய்ஸ்கால் சலுகையும், 12 ஓ.டி.டி., தள பயன்பாடுகளுக்கான சலுகையும் 300 Mbps அதிவேக இணைய சேவையை பெறலாம்.
ஆனால் JioTV Plus மூலமாக நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார் வி.ஐ.பி., ஜியோ சினிமா, ஜீ5, சோனி லிவ், வூ, ஆல்ட்பாலாஜி, சன் என்.எக்ஸ்.டி., லயன்ஸ்கேட் பிளே, ஷெமரூ மற்றும் ஹோய்சோய் உள்ளிட்ட ஓ.டி.டி., சேவைகளை பெற, ஜியோ பைபர் செட்டாப் பாக்சைப் பெறுவது இந்த திட்டத்தின் கீழ் வருகிறது. செப்., 1 முதல் நடைமுறைக்கு வரும், இந்த திட்டத்தின் கீழ் இணையும் புதிய வாடிக்கையாளர்களுக்கு 30 நாள் இலவச சேவையுடன், அன்லிமிட்டெட் வாய்ஸ்கால் வசதி, 150 Mbps வேகத்தில் இணைய சேவை மற்றும், 4கே செட்டாப் பாக்ஸ் தரப்படுகிறது.