செல்போனுக்கு 'தாலி' கட்டி நடந்த திருமணம்! என்கேஜ்மென்ட் முடிஞ்சு ரெண்டு வருஷம் ஆச்சு.. பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளா: இந்தியாவில் மீண்டும் தலைத்தூக்கியுள்ள கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இளம் ஜோடி ஒன்று Video Call மூலம் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்தேறியுள்ளது
கடந்த 2019-ஆம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா வைரஸின் மூன்றாம் அலை தற்போது உருவாகி வருகிறது. தற்போது பரவி வரும் உருமாறிய கொரோனா வைரசானா ஒமைக்ரான் பயங்கர வேகமாக தாக்கி வருகின்றது.
நூறு பேர் மட்டுமே கலந்துக் கொள்ள வேண்டும்:
இதனால் இந்திய மாநிலங்கள் தங்கள் பாதிப்புகளுக்கு ஏற்றார் போல பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது. அந்த வகையில் திருமண நிகழ்வுகளில் 100 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு அமலில் உள்ளது.
விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகள்:
இதற்கு முன்னும் கடந்த கொரோனா அலைகளிலும் இதே போல சுப நிகழ்ச்சிகளுக்கும், கூட்டங்களுக்கும், கோவில்களுக்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அப்போது தான் முதல் முதலில் அதுவும் இந்தியாவில் வீடியோ கால் திருமணங்கள் பிரபலமாகின.
சூடு பிடிக்கும் வீடியோ கால் திருமணங்கள்:
ஏனென்றால் இந்தியாவில் திருமணம் என்பது ஒரு பெரிய கலாச்சாரமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த கொரோனா வைரஸ் அதையெல்லாம் மாற்றியுள்ளது. இந்நிலையில் மீண்டும் வீடியோ கால் திருமணங்கள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளன.
அதன் ஒரு பகுதியாக கேரளாவில் ஆசிரியராக பணிபுரியும் கீர்த்தனாவிற்கும், நியூசிலாந்தில் பணிபுரியும் நிர்மல் என்பவர் Video Call மூலம் ஒரு திருமணம் நடந்துள்ளது.
காத்திருந்து எந்த பயனும் இல்லை:
இவர்கள் இருவருக்கும் கடந்த 2019-ஆம் ஆண்டே திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் இவர்களது திருமணம் மூன்று ஆண்டுகள் தள்ளி சென்றுள்ளது. இதற்கு மேல் காத்திருந்து எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்த இந்த தம்பதி ஆன்லைனில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இதையடுத்து இருவீட்டார் சம்மதத்துடன் Video Call-ல் திருமணம் நடந்துள்ளது.
இதில் சுவரஷ்யமான விஷயம் என்னவென்றால் மணமகன் நிர்மல் போனை பெண்ணாக நினைத்து தாலி கட்டியுள்ளார். இதையடுத்து உறவினர்கள் சாட்சி கையெழுத்திட்டுள்ளனர்.