
VIDEO: குதிரை மேலே ஏற காலை தூக்கியதும் கிழிந்த மணமகன் பேண்ட்.. மணமகள் உள்பட அத்தனை பேரும் கொடுத்த ரியாக்சன்
முகப்பு > செய்திகள் > இந்தியாகுதிரை வண்டியால் மணமகன் கோவமாக கத்திய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பொதுவாக சில திருமணங்கள் பல சடங்கு சாம்பிராதயங்களுடன் கோலாகலமாகவும், அமைதியாக நடக்கும். இன்னும் சில திருமணங்கள் பயங்கர காமெடியாகவும் நடந்திருக்கிறது. இப்போது இருக்கும் இந்த நவீன காலத்தில் ஒரு தும்மல் தும்மினால் கூட உடனடியாக சமூகவலைத்தளத்தில் வீடியோவாக போட்டு விடுகின்றனர்.
டிரெண்ட் ஆகும் திருமணங்கள்:
வட இந்தியாவில் நடத்தப்படும் திருமணங்களின் வீடியோ எக்கச்சக்கமாக இணையத்தில் இருக்கும். அதோடு திருமணத்தில் அக்னி சுற்றும் போது மணமகனின் வேட்டி அவிழும் வீடியோ, மணமகள் தாலிக்கட்டும் போது பேசிகொண்டிருக்கும் வீடியோ என பல வீடியோக்கள் இணையத்தில் உள்ளது. சில வீடியோக்கள் டிரென்ட் ஆக வேண்டும் என்றே கதை தயார் செய்து அதை வீடியோவாக எடுத்து பரவ விடுபவர்களும் உண்டு. அதன் மூலமாக பிரபலமானவர்களும் உண்டு. திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட் முதல் திருமணம் முடியும் வரை நடக்கும் கூத்துகள் வேடிக்கையாக இருக்கும்.
திருமண சடங்கு முறைகள்:
அதன் வரிசையில் இப்போது இன்னொரு வீடியோவும் சேர்ந்துள்ளது. பொதுவாக வட இந்தியாவில் மாப்பிள்ளையை குதிரையில் ஏற்றி ஊர்வலமாக கூட்டி வருவது மிக முக்கியமான கலாச்சாரமாகும். இப்படியான நிகழ்வில் மாப்பிள்ளை தான் ஹீரோ. அப்படியான ஹீரோவை சாரட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து வருவது வாடிக்கை.
காமெடியனாக மாறிய மாப்பிள்ளை:
ஆனால், இந்த திருமணத்தில் குதிரை வண்டியால் மாப்பிளை காமெடியானாக மாறியுள்ளார் அதாவது மாப்பிளை குதிரையில் ஏற தன் காலை தூக்கி போடும் போது அவரது பேண்ட் கிழிந்துள்ளது. இதை பார்த்ததும் சுற்றியிருந்த விருந்தனர்கள், நண்பர்கள் உறவினர்கள் எல்லோரும் வாய்விட்டு சிரித்துவிட்டனர்.
உச்சக்கட்ட கோவம்:
இதனால், குதிரையிலிருந்த மாப்பிள்ளைக்கு கடும் கோபம் வந்துவிட்டது. கோபத்தின் தன் குடும்பத்தினரை வாய்க்கு வந்தவாறு கன்னாபின்னா என்று திட்டிவிட்டு கோவத்துடன், தனக்காக வேறு ஒரு பேண்ட் எடுக்கும்படி சொல்லியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

மற்ற செய்திகள்
