கார் விபத்தில் சிக்கிய ஹாலிவுட் நடிகர் அர்னால்டு.. ‘இதுதான் அவரை காப்பாத்தி இருக்கு’.. வெளியான போட்டோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Jan 23, 2022 09:28 AM

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு சென்ற கார் விபத்திற்குள்ளாகி உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Hollywood Actor Arnold involved in car accident

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு (Arnold) சென்ற கார் விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்து தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Hollywood Actor Arnold involved in car accident

நேற்று லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) பகுதியில் உள்ள அலன்போர்டு சாலையில் அர்னால்டு தனது சென்றுகொண்டு இருந்துள்ளார். அப்போது அவரது காருக்கு முன்னால் சென்ற இரு கார்கள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியுள்ளன. இதனால் பின்னாடி வந்த வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக மோதிக்கொண்டன.

Hollywood Actor Arnold involved in car accident

இந்த விபத்தில் நான்கு கார்கள் அடுத்தடுத்து சிக்கின. இதில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு பயணம் செய்த கார் ஒரு சிறிய காரின் மீது மோதி மேலே ஏறி நின்றது. சீட் பெல்ட் அணிந்திருந்தால் அதிர்ஷ்டவசமாக அர்னால்டுக்கு எந்த காயங்களும் ஏற்படாமல் உயிர் தப்பினார்.

Hollywood Actor Arnold involved in car accident

இந்த விபத்தில் பெண் ஒருவருக்கு மட்டும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விபத்தில் சிக்கி காயமடைந்த பெண்ணை நேரில் சென்று அர்னால்டு சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags : #ACCIDENT #ARNOLD #CARACCIDENT #HOLLYWOOD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Hollywood Actor Arnold involved in car accident | World News.