VIDEO: ஒழுங்கா க்ளீன் பண்ணிட்டு போ.. பப்ளிக்கில் பெண் போலீஸ் போட்ட ஆர்டர்! துடைச்ச அப்புறமும் சும்மா விடல!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மத்திய பிரதேசம்: பெண் போலீஸ் ஒருவர் தன் பேண்டில் ஏற்பட்ட கரையை துடைக்குமாறு கட்டாயப்படுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேச மாநிலம் ரேவா பகுதியில் பெண் போலீஸ் ஒருவர் பைக்கில் பின்னோக்கிச் செல்ல முயன்றுள்ளார். அப்போது அவரின் பேண்டில் சேறு கறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த பெண் போலீஸ் சேறு ஏற்பட காரணமாக இருந்த நபரை, அவருடைய பேண்ட்டை சுத்தம் செய்யும்படி கட்டாயப்படுத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 6 வினாடி உடைய இந்த வீடியோவில் பெண் போலீசாரின் முகம் தெரியவில்லை. அவர் முகத்தில் வெள்ளை துணி ஒன்றை கட்டியுள்ளார். வீடியோவில் அந்த நபர் பெண் போலீசின் பேண்டில் ஏற்பட்ட கறையை சிவப்பு துணி ஒன்று கொண்டு துடைக்கிறார்.
அதோடு அந்த பெண் போலீஸ் அந்த நபரை அறைந்துவிட்டு செல்லும் காட்சிகளும் இருக்கிறது. இந்த வீடியோ பதிவு செய்யப்பட்ட சில நிமிடங்களில் வைரலாகி சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்களை பெற்றுள்ளது.
தற்போது விசாரணையில் அந்த பெண் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் சாஷி கலா என்று தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து ரேவா பகுதியின் எஸ்.பி சிவ் குமார் அவர்களிடம் கேட்ட போது, 'நாங்கள் அந்த வீடியோவை பார்த்தோம். இதுகுறித்து யாராவது புகாரளித்தால் அந்த பெண் போலீசின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவித்துள்ளார்.
मध्य प्रदेश के रीवा में एक महिला पुलिसकर्मी ने सिरमौर चौक के पास पहले युवक से पैंट साफ कराई. फिर उसे जोरदार थप्पड़ जड़ दिया. बाइक हटाते हुए महिला पुलिसकर्मी के पैंट में कीचड़ लग गया था @ndtv @ndtvindia @DGP_MP @drnarottammisra pic.twitter.com/m0hdSJ2mrZ
— Anurag Dwary (@Anurag_Dwary) January 12, 2022

மற்ற செய்திகள்
