'உலகமே காத்துக்கிடக்க'... 'கொரோனா தடுப்பூசி குறித்து முக்கிய தகவலுடன்'... 'WHO கொடுத்துள்ள ஷாக்!'...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்து எப்போது பயன்பாட்டுக்கு வருவதற்கான வாய்ப்புள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவின் வுஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள் உயிரிழப்பு, பொருளாதார இழப்பு என ஸ்தம்பித்துப் போயுள்ள நிலையில் அனைவரும் தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டு விடும் என்ற ஒற்றை நம்பிக்கையிலேயே உள்ளனர். தற்போதுவரை பெரும்பாலான நாடுகளின் தடுப்பு மருந்துகள் அனைத்தும் பரிசோதனை அளவிலேயே உள்ளன. ரஷ்யா தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டதாக கூறினாலும் அதன் மீதான நம்பகத்தன்மை குறித்த கேள்வி எழுந்த வண்ணமே உள்ளது. இருப்பினும் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பை துரிதப்படுத்தும் முயற்சிகள் உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ள உலக சுகாதார அமைப்பின் செய்தித்தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ், "கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்து அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் மூன்றாம் கட்ட கொரோனா தடுப்பு மருத்து பரிசோதனை நீண்ட நாட்கள் நடைபெற்றால் மட்டுமே அதன் பாதுகாப்பு தன்மை குறித்து நாங்கள் ஆராய முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.