'என் பெயரை கேட்டாலே...' 'எதிர்ல நிக்றவங்க கண்ணுல மரண பயம் தெரியுது...' 'அப்படி என்ன பெயர் வச்சுருக்காங்க...' - இப்படியுமா ஒரு இளம்பெண்ணிற்கு சோதனை வரும்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் பெற்றோர் வைத்த கொரோனா என்ற பெயரால் 34 வயதுடைய இளம்பெண் ஒருவர் தற்போது படாத பாடுபட்டு வருகிறார்.
உலகமெங்கிலும் தற்போது கொரோனா என்ற பெயரைக் கேட்டாலே அனைவரும் பயப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த நோய் வராமல் இருக்க பலரும் முகக்கவசம் அணிந்தும், கையில் சானிட்டசைருடனும் சென்று கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், ஒருவருக்கு கொரோனா என பெயர் இருந்தால் அவரது நிலை என்னவாகும் என்பதற்கு உதாரணமாக கேரளாவில் ஒரு இளம்பெண் உள்ளார்.
கேரள மாநிலம், கோட்டயம் அருகே உள்ள சுங்கம் எனும் ஊரை சேர்ந்தவர் ஷைன் தாமஸ். மீனவரான இவரது மனைவிக்கு, அவரது பெற்றோர் கொரோனா என பெயர் வைத்துள்ளனர். இது தற்போது ஏகப்பட்ட சிக்கல்களை உருவாகியுள்ளது.
இதுகுறித்து இளம்பெண் கொரோனா கூறுகையில், நான் பிறந்ததும் ஆலப்புழாவில் உள்ள ஆலயத்தில் எனக்கு ஞானஸ்நானம் அளிப்பதற்காக பெற்றோர் கூட்டி சென்றனர். அப்போது எனக்கு ஒரு பெயரை வைக்கும்படி பாதிரியார் ஜேம்சிடம் கூறினர்.
பிடித்தமான பெயர் ஏதேனும் இருக்கிறதா என்று பாதிரியார் கேட்டுள்ளார்.
அப்படி எதுவுமில்லை என்று பெற்றோர் கூறினர். இதனையடுத்து, அந்த பாதிரியார் தான் எனக்கு சூட்டிய பெயர் கொரோனா. அதற்கு கிரீடம் என்ற பொருள் உள்ளது என்றும் பாதிரியார் ஜேம்ஸ் கூறியுள்ளார். அந்தப் பெயர் வைக்கும்போது அதனால் பிற்காலத்தில் பெரும் சிக்கல் வரும் என எனது பெற்றோரும், பாதிரியார் ஜேம்சும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.
இப்போது எங்கு சென்றாலும் என்னுடைய பெயரைக் கேட்டால் சிலர் நான் பொய் சொல்வதாக நினைக்கின்றனர். சிலர் ஆச்சரியத்துடனும், பீதியுடன் அவர்கள் கண்ணில் மரண பயத்தை பார்க்கிறேன். நான் அடிக்கடி ரத்த தானம் செய்ய மருத்துவமனைக்கு செல்வது உண்டு. ரத்தம் கொடுக்கும்போது அங்குள்ள விண்ணப்பத்தில் நான் எனது பெயரை எழுதும்போது, ‘ஏன் கொரோனா என்று எழுதுகிறீர்கள்? உங்களுடையை பெயரை எழுதுங்கள்,’ என்று கூறுவார்கள். ஆனால், உண்மையிலேயே என்னுடைய பெயர் கொரோனா தான் என்று கூறினாலும் அவர்கள் நம்புவதில்லை. இவ்வாறு கொரோனா தெரிவித்துள்ளார்.