'மது பாட்டில்.. பெல்ட்..!'.. '6 வயது' குழந்தைக்கு 'பள்ளிக்கு' அருகிலேயே நடந்த 'கொடூர' சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Dec 02, 2019 12:08 PM

ராஜஸ்தானில் 6 வயது பள்ளிக்குழந்தை கடந்த வாரம் தோங்க் மாவட்டத்தில் காணாமல் போன நிலையில், தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

missing 6 yr old girls dead found near her school

கடந்த சனிக்கிழமை பள்ளிக்குச் சென்ற 6 வயது பெண் குழந்தை, வீடு திரும்பாததால், அதிர்ந்த பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில், பள்ளியில் இருந்து 1 கி.மீ தொலைவில் குழந்தையின் சடலம், ரத்தக் கறையுடனும், குழந்தையின் பெல்ட்டுடனும், அருகில் மது பாட்டிலுடனும் கிடைத்துள்ளதை அடுத்து அம்மாநிலமே பதைபதைப்புக்குள்ளாகியுள்ளது.

குழந்தை அடித்து துன்புறுத்தப்பட்டும், பலாத்காரம் செய்யப்பட்டும் இறந்திருக்கலாம் என கருதும் போலீஸார், குழந்தையின் பிரேதத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்ததோடு, மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

Tags : #RAJASTHAN