'முன்களப்பணியாளர்னு போலியா ரெஜிஸ்டர் பண்ணி...' 'கொரோனா தடுப்பூசி போட்டதாக குற்றச்சாட்டு...' - விளக்கம் அளித்த பிரபல நடிகை...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமுன்களப்பணியாளர் என தன்னை போலியாக பதிவு செய்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக பிரபல நடிகை மீது புகார் எழுந்துள்ளது.
நடிகை மீரா சோப்ரா, தமிழில் 'அன்பே ஆருயிரே', 'லீ', 'மருதமலை' உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமானவர். இவர் தன்னை நடிகை மீரா சோப்ரா தன்னை முன்கள பணியாளர் என பதிவு செய்து கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டதாக அடையாள அட்டை சமூகவலைதளங்களில் வெளியாகி சர்ச்சையானது.
இந்நிலையில் அதற்கு விளக்கம் தெரிவிக்கும் வகையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 'நான் கடந்த ஒரு மாதமாக முயற்சி செய்து, எனக்கு தெரிஞ்சவங்ககிட்ட உதவி கேட்டு, சில நாட்களுக்கு முன்பு தான் கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டேன்.
தடுப்பூசியை பதிவு செய்றதுக்கு என்னிடம் ஆதார் கார்டு கேட்டார்கள். அதற்காக என்னோட ஆதார்டு கார்டை அனுப்பினேன். சமூக வலைதளங்களில் உலாவிக்கிட்டு இருக்கும் ஐடி கார்டு என்னோடது இல்லை.
சமூகவலைதளங்களில் பரவும் ஐடியை முதன்முறையாக ட்விட்டரில் பார்த்தேன். நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன். எதுக்காக இந்த மாதிரியான ஐடியை உருவாக்குனாங்க, எப்படி உருவாக்குனாங்க நானும் தெரிஞ்சுக்கனும்' என நடிகை மீரா குறிப்பிட்டுள்ளார்.
My statement on the articles that has been coming out fr my vaccine shot!! pic.twitter.com/wDE70YHsMo
— meera chopra (@MeerraChopra) May 30, 2021