'ஒவ்வொரு தடவையும் நடக்குற மாதிரி போய் கடைசியில நின்னுடுது...' 'இந்த தடவ எப்படியாச்சும் பண்ணிடனும்...' - திருமணம் செய்வதற்காக இளைஞர் எடுத்த ரிஸ்க்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | May 26, 2021 10:02 PM

பீகார் மாநிலத்தில் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் 24 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டி சென்று திருமணம் செய்த நபரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Bihar man who cycled 24 km and got married for lockdown

இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வரும் நிலையில் மாநில அரசுகள் பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக அடிக்கடி கடுமையான ஊரடங்குகளும், தளர்வுகளும் அமல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் பிகாரிலும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் கவுதம் குமார் என்பவரின் திருமணமும் தள்ளிப்போடப்பட்டுள்ளது.

பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் உச்சககானில் வசிக்கும் கவுதம் குமாருக்கும், பாங்கா மாவட்டம் பாரத்சிலா கிராமத்தில் வசிக்கும் கும்குமுமாரி என்பவருக்கும் கடந்த வருடம் ஜனவரி மாதம் திருமணம் என நிச்சயிக்கப்பட்டது. அதன்பின் கொரோனா ஊரடங்கு காரணமாக திருமணம் நிறுத்தப்பட்டது.

அதன்பின் மீண்டும் 3, 4 முறை திருமண ஏற்பாடுகள் நடத்தப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவே திருமணம் நிறுத்தப்பட்டது.

இதனால் வருத்தமடைந்த கவுதம் கடந்த வெள்ளிக்கிழமை திருமண ஆடைகள் அணிந்து கொண்டு, கையில் மாலையுடன் உச்சககானில் இருந்து சைக்கிளில் கிளம்பியுள்ளார்

மணமகளின் ஊரான பாரத்சிலா கிராமத்திற்கு 24 கி.மீ தூரம் சைக்கிளில் சென்ற கெளதம் அதேநாளில் விருந்தினர்கள், கொண்டாட்டங்கள், திருமண ஊர்வலம் ஏதுமின்றி எளிய முறையில் கும்குமுமாரியை திருமணம் செய்துகொண்டார்.

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட ஷம்புகஞ்ச் வட்டார அலுவலர் பிரபாத் ரஞ்சன், மணமக்களை நேரில் வந்து ஆசீர்வதம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கூறிய அவர், 'கொரோனா வைரஸ் இரண்டாவது அலையால் பீகாரில் ஊரடங்கு கடுமையாக உள்ளது. மணமகன் கவுதமின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது. மற்றவர்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாத வகையில் கவுதம் திருமணம் செய்து கொண்டார். புதிதாக திருமணமான தம்பதியினருக்கு மாவட்ட கலெக்டருடன் பேசி விருது வழங்க ஏற்பாடு செய்யப்படும்' எனவும் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Bihar man who cycled 24 km and got married for lockdown | India News.