'வௌவால்கள் கிட்ட இருந்து வைரஸ எடுத்து...' அதோட இன்னும் 'சில விஷயங்கள' மிக்ஸ் பண்ணி தான் 'ஆபத்தான' கொரோனாவ ரெடி பண்ணியிருக்காங்க...! வெளிவந்திருக்கும் 'ஷாக்' தகவல்...!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் உலக மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்து வருவத்தோடு, இன்னும் முற்றுப்புள்ளியே இல்லாமல் பராவிகொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரிட்டிஷ் பேராசிரியர் அங்கஸ் டால்க்லிஷ் மற்றும் நார்வே விஞ்ஞானி டாக்டர் பிர்கர் சோரன்சென் ஆகியோர் நடத்திய ஆய்வின் முடிவுகளை வைத்து டெய்லி மெயில் ஊடகம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், 'சீனா நம் எல்லோரையும் ஏமாற்றி வருகிறது. இப்போது பரவி வரும் கொரோனா வைரஸ் வூகான் மாகாணத்தின் சந்தையில் இருந்து பரவி வருவதாக கூறுகிறது.
ஆனால் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் வௌவால்களில்டம் இருந்து எடுத்து அதனை சிலவற்றை கலந்து ஆபத்தான கொரோனா SARS-CoV-2 வைரஸை உருவாக்கியுள்ளதாக ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் தற்போது பரவி வரும் வைரஸிற்கு முதாதையர்கள் இல்லை என்பது முக்கியமாக நாம் பார்க்க வேண்டிய ஒன்று.
வைரஸ் வௌவால்களிடம் இருந்து இயற்கையாக பரவியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த அவர்கள் முயற்சி செய்துள்ளனர்.
கொரோனா தொற்று குறித்து சீனா அறிவிப்பதற்கு பல மாதங்களுக்கு முன்னரே, ஊகான் நகர வைராலஜி ஆய்வக விஞ்ஞானிகள் மருத்துவ உதவியை நாடியதாக அமெரிக்க உளவுத்துறை அண்மையில் கூறியதும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்று' எனக் கூறியுள்ளது.