மூன்றாம் அலை வேற உருவாகுமான்னு தெரியலையே...! 'வொர்க் ஃப்ரம் ஹோம்' தொடர்பாக 'பிரபல' நிறுவனங்கள் எடுத்துள்ள முக்கிய முடிவு...!
முகப்பு > செய்திகள் > வணிகம்தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தலைவிரிந்தாடும் நிலையில் ஒர்க் ஃபிரம் ஹோம்மை மீண்டும் நீட்டிக்க பல்வேறு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்தியா மட்டுமல்லாது உலகளவில் கொரோனா வைரஸ் பரவி வந்த நிலையில், ஒர்க் பிரம் ஹோம் என்ற விதியை கையிலேடுத்தது பல ஐ.டி நிறுவனங்கள்.
உலக நாடுகள் பல தங்களின் அன்றாட வாழ்க்கையை தொடங்கி, அலுவலகங்களுக்கு சென்றாலும், இந்தியா மற்றும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் குறைந்தபாடில்லை. இதனால் ஐடிசி, மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ், பிளிப்கார்ட், நெஸ்லே, டொயோடோ கிர்லோஸ்கர், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, அமேசான், கோத்ரெஜ், அசோக் லேலண்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் அலுவலகத்தை திறப்பதற்கு ஆர்வம் காண்பிக்கவில்லை.
அதோடு வரும் ஜூன் மாதம் முதல் அலுவலகங்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடும் என்னும் எதிர்பார்ப்பு இருந்தாலும் செப்டம்பர் வரை வீட்டில் இருந்தே பணி செய்ய பல கார்ப்பரேட் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன
அதோடு மூன்றாம் அலை உருவாகுமா இல்லையா என்பதை வைத்தே அலுவலகம் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.
அலுவலகங்கள் திறக்கப்படவிட்டாலும் தொழிற்சாலைகள் அவசியம் என்பதால் தொழிற்சாலை சார்ந்த பணிகளில் எந்தவிதமான தேக்கமும் இருக்காது எனவும், வீட்டில் இருந்தே பணியாற்ற முடியும் என்பவர்களுக்கு அதற்கான வாய்ப்பை வழங்க இருப்பதாக மனிதவள பிரிவு அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
ஒர்க் பிரம் ஹோம் நிகழ்வால் நிறுவனங்களின் செலவுகள் குறைவதும் கூட ஒரு காரணமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. அதோடு கடந்த ஆண்டில் 100 கோடி டாலர் அளவுக்கு மீதமாகி இருப்பதாக சில வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
