கட்டுப்பாடுகளை தளர்த்துறோம்...! இனிமேல் 'எத்தனை' குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ளலாம்...? - அதிரடி 'அறிவிப்பை' வெளியிட்ட சீனா...!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் சட்டத்தில் தளர்வினை ஏற்படுத்தியுள்ளது.
சீனா, உலகின் அதிக மக்கள் தொகை உள்ள நாடாக இருக்கிறது. அங்கு கடுமையான மக்கள் தொகை அதிகரிப்பைத் தொடர்ந்து கடந்த 1980-ஆம் ஆண்டு முதல் சீனத்தில் தம்பதியர் குழந்தைப் பெற்றக் கொள்ள கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், சீனாவில் வேலை செய்யும் மக்களின் எண்ணிக்கை கடந்த சில பத்தாண்டுகளில் குறைந்து வருவதாக தெரிந்துள்ளது.
அதோடு, 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், இது பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் மிகப்பெரிய சுமையை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சீனாவில் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு தளர்வினை அறிவித்திருக்கிறது. அதில் இதுவரை இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொள்ள அனுமதியிருந்த நிலையில், தற்போது ஒரு தம்பதி மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.
இந்த அறிவிப்பு சீனாவின் மக்கள் தொகையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.