'கத்திரிக்கா, வால் மிளகு' சேர்த்து கொரோனாவுக்கு மருந்து கண்டுப்பிடிச்சிட்டதா வீடியோ போட்ட நபர்...' 'தற்போது ஐ.சி.யு-வில் அட்மிட்...' - இவர நம்பி 'அத' வாங்கி 'யூஸ்' பண்ணவங்க நிலைமை என்ன தெரியுமா...?
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திராவில் கோவிட் வைரஸிற்கு கைவைத்தியம் எடுத்து நலமாக உள்ளேன் என வீடியோ வெளியிட்ட நபர் தற்போது ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தின் அருகிலுள்ள கோட்டா மண்டலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஒருவர் வெளியிட்ட வீடியோ சில நாட்களுக்கு முன் வைரலாகியது.
அதில் தலைமையாசிரியான போனிஜி ஆனந்தையா, கிருஷ்ணபட்னம் என்ற இடத்திற்கு சென்று நாட்டு மருத்துவ பயிற்சியாளர் உதவியுடன் ஒரு மருந்தை தயாரித்துள்ளதாக கூறியிருந்தார்.
அதில் தேன், வால் மிளகு மற்றும் ஒரு குறிப்பிட்ட வகையான கத்திரிக்காயின் கூழ் ஆகியவற்றால் ஆனா ஒரு சொட்டு மருந்து என தெரிவித்துள்ளார். இந்த சொட்டு மருந்தை தன் கண்களில் ஊற்றிய பிறகு நன்றாக உணர்ந்ததாக அந்த வீடியோவில் கூறியிருந்தார். அதனால் பலர் அவரிடம் சென்று அந்த மூலிகை மருத்துவத்தை எடுத்து கொண்டனர்.
அந்த வீடியோ வைரலாகிய நிலையில் தற்போது தலைமையாசிரியான போனிஜி ஆனந்தையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இப்போது ஆக்ஸிஜன் ஆதரவுடன் ஐ.சி.யுவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கூறிய நெட்டூர் இணை கலெக்டர் எம்.என்.ஹரேந்திர பிரசாத், 'மே 23 அன்று கோட்டையா ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்ட போது நோயின் தீவிரத்தன்மை 20 சதவீதத்துக்கு மேல் இருந்தது.
மருத்துவரின் கூற்றுப்படி, அவர் ஐ.சி.யுவில் ஆக்ஸிஜன் உதவியுடன் இருக்கிறார், அவரது இரத்த ஆக்ஸிஜன் அளவு 85 க்கு மேல் ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. அதோடு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நேரத்தில் கண்களில் எரிச்சல் மற்றும் சிவப்பாக இருந்ததாகவும் கோட்டையா கூறியிருந்தார்.
மேலும் கோட்டையாவின் மருந்து குறித்து கூறிய மருத்துவர்கள், 'ஆனந்தயாவை போல சிகிச்சையை எடுத்துக் கொண்ட சுமார் 24 கோவிட் -19 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மற்ற செய்திகள்
