'எங்க கம்பெனியில வொர்க் பண்றவங்க...' 'யாராச்சும் கொரோனாவால இறந்துட்டாங்கன்னா...' 'அவங்களோட 60 வயது வரை முழு சம்பளத்தை கொடுப்போம்...' - சலுகைகளை அறிவித்த 'பிரபல' கம்பெனி...!
முகப்பு > செய்திகள் > வணிகம்கொரோனா வைரஸ் முதல் அலை முடிந்து இரண்டாவது அலை இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல பெரிய நிறுவனங்களும், சிறு நிறுவனங்களும் தங்களின் ஊழியர்களை பொதுமானவரை குறைத்து வந்தனர். இதனால் பல குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரங்களையும் இழக்கும் நிலை ஏற்பட்டது.
ஆனால் டாடா ஸ்டீல் நிறுவனமோ தங்களின் ஊழியர்களுக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் ஆதரவு தரும் விதமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், டாடா ஸ்டீல் நிறுவன ஊழியர்கள் யாரேனும் கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்தால், அவரின் குடும்பத்திற்கு ஊழியர் ஓய்வு பெறும் 60 வயது வரையில் அவரின் சம்பளம் முழுமையாக ஒவ்வொரு மாதமும் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் முன்னெச்சரிக்கையாக, ஊழியரின் குடும்பத்திற்கு மருத்துவக் காப்பீடு மற்றும் தங்கும் வசதிகள் செய்து தரப்படுவதாக டாடா ஸ்டீல் தெரிவித்துள்ளது.
மேலும் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் முன்கள ஊழியர் யாரேனும் கொரோனா மூலம் உயிரிழந்தால், ஊழியரின் குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளின் கல்விச் செலவை பட்டம் பெறும் வரையில் நிர்வாகமே ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.