கொரோனா பாதித்தவர்கள் தும்மினால், பேசினால் நோய் பரவுமா..? மத்திய சுகாதாரத்துறை ‘புதிய’ வழிகாட்டு நெறிமுறை வெளியீடு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பேசினால், தும்மினால் நோய் பரவ வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதுவரை 2 லட்சத்துக்கு 70 ஆயிரத்துக்கும் அதிகமானொர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் தும்மினால், பேசினால் நோய் பரவுவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவும் என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மிய பின் அல்லது இருமிய பின் அவரது எச்சிலின் சிறிய துகள்கள் காற்றில் பரவி இருந்தால், அதை சுவாசிப்பவர்களுக்கும் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.
வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மும் போதும் அல்லது இருமும் போதும், பேசும் போதும் அவரிடம் இருந்து வெளிப்படும் எச்சிலின் பெரிய துகள்கள் 2 மீட்டர் தூரத்துக்குள் கீழே விழுந்துவிடும். ஆனால் ஏரோசோல் ( Aerosols) என்ற எச்சிலின் சிறிய துகள்கள் காற்றில் 10 மீட்டர் தூரம் வரை பரவும். இந்த ஏரோசோல்கள் அதிக நேரம் உயிருடன் இருக்கும். காற்றில் இருந்து ஏரோசோல்கள் விழுந்த இடத்தை ஒருவர் தொட்டுவிட்டு தனது மூக்கையோ, கண்களையோ தொட்டால் அவர் வைரஸால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், மூடப்பட்ட இடங்கள், காற்று வசதி இல்லாத இடங்கள் போன்ற இடங்களில் இந்த ஏரோசோல்கள் விழுந்தால் வைரஸ் தொற்று வேகமாக பரவும். அதனால் வைரஸ் பரவலை தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன் கிருமிநாசினிகளை பயன்படுத்தி கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
முக்கியமாக நல்ல காற்றோட்டம் உள்ள பகுதிகளில் மக்கள் இருப்பது நல்லது. காற்றோட்டம் உள்ள பகுதிகளில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் வீடுகளில் ஜன்னல்களை திறந்து காற்றோட்டமாக வைத்திக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
