'இந்த நாடுகளுக்கு எல்லாம் போக வேண்டாம்'... 'லிஸ்டில் இருக்கும் நாடுகள்'... அமெரிக்கா எச்சரிக்கை!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜப்பான், இலங்கை ஆகிய நாடுகளில் தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துக் காணப்படுகிறது. ஜப்பானில் கடந்த 24 மணி நேரத்தில் 4, 045 பேர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளாகினர். இலங்கையில் 2,971- பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இருநாடுகளிலும் தொற்று பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளதால், அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்கா தங்கள் நாட்டு மக்களுக்குப் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்ட அறிவுறுத்தலில், ஜப்பான் செல்ல வேண்டிய தேவை இருக்கும் பட்சத்தில் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
அதோடு ஜப்பானில் தற்போதைய சூழலில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கூட உருமாறிய கொரோனாவை பரப்ப வாய்ப்பு உள்ளதாகவும் அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க சில வாரங்களே எஞ்சியிருக்கும் நிலையில் தொற்று பரவல் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, கொரோனா பெருந்தொற்று காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
