அவங்க 'உளவுத்துறைய' பத்தி எங்களுக்கு தெரியாதா...?! சதாம் உசேன் இருக்குறப்போவே 'அப்படி' சொன்னவங்க...' - அமெரிக்காவை விளாசி தள்ளிய சீனா...!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் சீன ஆய்வுக்கூடத்தில் இருந்து தான் பரவியதா என்பதை 90 நாட்களுக்குள் கண்டுபிடித்துத் தரும்படி அமெரிக்க உளவுத்துறைக்கு அதிபர் ஜோ பைடன் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சீனாவில் உள்ள வுகான் நகரில் உள்ள இறைச்சி மார்க்கெட்டில் இருந்து தான் முதலில் கொரோனா வைரஸ் பரவியதாக கூறப்பட்டது.
அடுத்ததாக வுகான் நகரில் சீன அரசின் உயிரியல் ஆய்வுக்கூடம் ஒன்று உள்ளது. இங்கு உயிரி ஆயுதமாக பயன்படுத்துவதற்காக கிருமிகளை உருவாக்கியதாகவும், அதில் ஒரு கிருமிதான் கொரோனா வைரஸ் என்றும் தகவல் பரவியது.
இதை சீனா கடுமையாக மறுத்தது. ஆனாலும் அதுபற்றி ஆய்வு செய்வதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் குழு ஒன்று சீனாவிற்கு சென்று பரிசோதித்து. ஆனால் ஆய்வகத்தில் இருந்து பரவியதற்கான ஆதாரங்கள் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் அமெரிக்காவில் வெளிவரும் 'வால்ஸ் ஸ்டிரீட் ஜேர்னல்' என்ற பிரபல பத்திரிக்கை இதழ் செய்தி ஒன்றை வெளியிட்டது. சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதாக தகவல் வெளியாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக சீன உயிரியல் ஆய்வுக்கூடத்தில் பணியாற்றிய மூன்று விஞ்ஞானிகளுக்கு மர்ம நோய் ஒன்று உருவானது.
அந்த மூன்று பேரை கண்காணித்து தீவிரமாக சிகிச்சை அளித்தும் அவர்களை குணப்படுத்த முடியவில்லை. அதன் பிறகு அவர்கள் உடலை சோதனை நடத்தியதில், புதிய வகை வைரஸ் ஒன்று அவர்களை தாக்கியது கண்டு பிடிக்கப்பட்டது. அதுதான் கொரோனா வைரஸ் என்று அந்த பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. இதை சீனா உடனடியாக இது பொய்யான தகவல் என்று கூறி மறுத்தது. அமெரிக்க தரப்பில் இருந்து தவறான தகவல்களை பரப்புகிறார்கள் என்றும் கடுமையாக குற்றம் சாட்டியது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் சீன ஆய்வுக்கூடத்தில் இருந்து தான் பரவியதா என்பதை உடனடியாக கண்டுப்பிடுக்குமாறு அமெரிக்க உளவுத்துறைக்கு அதிபர் ஜோ பைடன் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். அதிகபட்சமாக 90 நாட்களுக்குள் இது சம்பந்தமான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் ஆணையிட்டுள்ளார்.
இது பற்றி சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஷஹோ லிஜியன் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘அமெரிக்காவின் உளவுத்துறை வரலாறு பற்றி எங்களுக்கு நல்லாவே தெரியும். சதாம் உசேன் காலத்தில் ஈராக்கில் பேரழிவை உருவாக்கக் கூடிய ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை கூறியது. ஆனால் உண்மை என்னவென்றால் அங்கு அப்படி எந்த ஆயுதமும் இல்லை என்பது போரின் முடிவுக்கு பிறகு உண்மை வெளிச்சத்திற்கு வந்தது’’ என்று தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
