"அலெர்ட்டா இருக்காங்கப்பா..".. கல்யாண பொண்ணிடம் ‘வினோத கண்டிஷன்’ ... பாண்டு பாத்திரத்தில் கையெழுத்து வாங்கிய நண்பர்கள்.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தற்போதையெல்லாம் நண்பர்கள், தங்கள் நண்பர்களின் திருமணத்திற்கு செல்லும் போது கொடுக்கக்கூடிய பரிசுகள், செய்யக்கூடிய சேட்டைகள் எல்லாம் முற்றிலும் வித்தியாசமாகவும் இணையத்தில் வைரலாகக் கூடிய வகையிலும் இருக்கின்றன.

அந்த வகையில் உசிலம்பட்டி திருமணத்தில் நண்பர்கள் தங்களுடைய நண்பரின் திருமணத்தில் கொடுத்த செய்த காரியம் வைரலாகி வருகிறது. மதுரை உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கீழப்புதூர் பகுதியைச் சேர்ந்த ஹரி பிரசாத் என்பவருக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேனியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கும் இவர் கிரிக்கெட் விளையாட்டிலும் நண்பர்களுடன் இணைந்து ஈடுபடுகிறார் என்று தெரிகிறது. அதே ஊரில் உள்ள சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் என்கிற அந்த அணியின் கேப்டனாக உள்ள ஹரிபிரசாத், தேனியைச் சேர்ந்த பூஜா என்பவரை உசிலம்பட்டியில் இருக்கும் தனியார் திருமண மண்டபத்தில் பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.
விமர்சையாக நடைபெற்ற இந்த திருமணத்தின் போது திடீரென்று மாப்பிள்ளையின் நண்பர்கள் ஒரு பத்திரத்துடன் வந்திருக்கின்றனர். அந்த பத்திரத்தில் தங்களுடைய நண்பர் ஹரிபிரசாத் தங்களுடைய கிரிக்கெட் அணிக்கு கேப்டன் என்பதால் அவர் திருமணத்திற்கு பின்னரும் கிரிக்கெட் விளையாடுவதற்கு அவருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து அதை அந்த பத்திரத்தில் எழுதியுள்ளனர், அதன்படி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஹரிபிரசாத் தம் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவதற்கு மணமகள் சம்மதிக்க வேண்டும் என்று மணமகளே ஒப்புக்கொண்டு தெரிவிப்பது போன்று அந்த சம்மத பத்திரத்தில் கையெழுத்து வாங்கி இருக்கின்றனர். இதை பார்த்த திருமணத்துக்கு வந்த அனைவரும் அதிர்ந்து இருக்கின்றனர்.
திருமணத்திற்கு பின்னரும் மணமகனை விளையாட்டில் கலந்து கொள்வதற்கு பல வீட்டில் மனைவிமார்கள் தடுப்பதும் நண்பர்களுடன் பழையபடி சேர்ந்து சுற்றுவதை கண்டிப்பதும் நடப்பதால், முன்கூட்டியே எச்சரிக்கையாக இந்த நண்பர்கள் இப்படி வினோத பத்திரம் ஒன்றை தயார் செய்து மணமகளிடம் கையெழுத்து வாங்கி விட்டனர். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
