'தங்கப் பதக்கம் வெல்வதே எனது வாழ்நாள் கனவு'.. 'அப்பா இருந்திருந்தா சந்தோஷப்பட்டிருப்பார்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Apr 25, 2019 03:19 PM

தங்கம் பதக்கம் வெல்வதே தன்னுடைய வாழ்நாள் கனவு என்றும், தற்போது அந்தக் கனவு நிறைவேறியது என்றும், ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

golden girl gomathi marimuthu says about her victory and moments

23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தோகாவில் நடந்து வருகிறது. பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 30 வயதான தமிழக வீராங்கனை கோமதி, 2 நிமிடம் 02.70 வினாடியில் 800 மீட்டர் தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

பதக்கம்வென்றதால் என்னுடைய சிறிய ஊர் முடிகண்டம் தற்போது வெளியே தெரிவது பெருமையாக உள்ளது என்று கோமதி மாரிமுத்து கூறியுள்ளார்.  தங்கப்பதக்கம் பெறும்வேளையில் தேசிய கீதம் இசைத்தபோது, எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது என்று அவர் தெரிவித்துள்ளார். 

வறுமைமிகுந்த குடும்பத்தில் இருந்து வந்த தமிழக வீராங்கனையான கோமதி மாரிமுத்து, இந்தியாவிற்கான முதல் தங்கப் பதக்கத்தை பெற்று நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். அப்பா உயிருடன் இருந்திருந்து தான் ஓடி ஜெயிச்சதை கண்டிருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்று தங்க மங்கை கோமதி தெரிவித்துள்ளார்.

வறுமைப் போராட்டத்தில் தங்கம் வென்ற கோமதிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. தலைவர் வைகோ உள்ளிட்டோர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : #GOMATHIMARIMUTHU #GOLDMEDAL