தாஜ்மஹாலை காண ஸ்ட்ரெச்சரில் வந்த 85 வயது மூதாட்டி.. கல்லையும் கரைய வைக்கும் உருக்கமான பின்னணி!!
முகப்பு > செய்திகள் > இந்தியாபொதுவாக, தங்களின் பிள்ளைகள் கனவை எப்படியாவது அவர்கள் நிறைவேற்றிவிட வேண்டும் என தாய், தந்தையர்கள் இரவு பகல் பாராமல் உழைப்பார்கள்.
Images are subject to © copyright to their respective owners.
அப்படி பெரும்பாடுபட்ட பிறகு, தங்கள் பிள்ளைகளும் உயர்ந்த இடத்திற்கு செல்வதை காண்பதை விட உலகிலுள்ள பெற்றோர்களுக்கு வேறு எதுவும் பெரிய மகிழ்ச்சி இருந்துவிட போவதில்லை. அதே வேளையில், தாங்கள் வாழ்க்கையில் பெரிய இடத்திற்கு வர உழைத்த பெற்றோர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்றும் பிள்ளைகள் நினைப்பார்கள்.
இந்த நிலையில், தனது 85 வயது தாய்க்காக மகன் ஒருவர் செய்த காரியம், தற்போது நெட்டிசன்கள் பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் இப்ராஹிம். இவரது தாயாருக்கு தற்போது 85 வயதாகிறது. கடந்த 32 ஆண்டுகளாக முதுகு தண்டுவட பிரச்சனையால் அவதிப்பட்டு வரும் இப்ராஹிமின் தாயார், படுத்த படுக்கையாக இருந்து வரும் சூழலில் அவரை மகன் இப்ராஹிம் தான் கவனித்து வருகிறார். படுக்கையிலேயே காலத்தை கழித்து வந்த இப்ராஹிமின் தாயாருக்கு மிகப் பெரிய ஆசை ஒன்றும் இருந்துள்ளது.
அதாவது, தனது வாழ்நாளில் தாஜ்மஹாலை காண வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாகவும் இருந்துள்ளது. இதனை தனது மகன் இப்ராஹிமிடமும் அவர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தாயின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என நினைத்த இப்ராஹிம், ரயில் மூலம் தனது தாயாரை ஆக்ராவிற்கு அழைத்து சென்றுள்ளார். சக்கர நாற்காலியில் இருப்பவர்களுக்கு மட்டுமே தாஜ்மஹாலுக்குள் அனுமதி என தெரிய வந்த சூழலில், பாதுகாவலர்களிடம் பேசி தனது தாய்க்காக அனுமதி பெற்றுள்ளார் இப்ராஹிம்.
Images are subject to © copyright to their respective owners.
இதனைத் தொடர்ந்து, தனது தாயை ஸ்ட்ரெச்சரில் வைத்து தாஜ்மஹாலை சுற்றி பார்க்க வைத்த இப்ராஹிம், அவரது நீண்ட நாள் கனவையும் நிறைவேற்றி உள்ளார். தனது தாய் மற்றும் குடும்பத்தினருடன் இப்ராஹிம் தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வரும் சூழலில் பலரும் இந்த மகனை பாராட்டியும் வருகின்றனர்.