லாட்டரியில் பல கோடி ஜெயிச்ச பெண்.. கொஞ்ச நாளிலேயே கணவருக்கு தெரிய வந்த அதிர்ச்சி.. "மனுஷன் நொறுங்கி போய்ட்டாரு"..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Mar 27, 2023 03:35 PM

அவ்வப்போது லாட்டரி மூலம் பலரது வாழ்க்கை தலைகீழாக மாறுவது குறித்து ஏராளமான செய்திகளை நாம் கடந்து வந்திருப்போம். நினைத்து கூட பார்க்காத ஒரு சமயத்தில் லாட்டரியில் பெருந்தொகை கிடைத்து அவரது வாழ்க்கையை கூட அப்படியே தலைகீழாக புரட்டிப் போடும்.

Woman leave her husband after won in lottery

Also Read | "நம்பர் 18 நான் கேட்டு வாங்குனதில்ல, ஆனா".. ஜெர்சி நம்பர் பின்னாடி இப்டி ஒரு ரகசியமா?.. கலங்கிய விராட் ரசிகர்கள்!!

இதனிடையே லாட்டரியில் பெண் ஒருவர் பெருந்தொகை வென்ற சூழலில் அதன் பின்னர் நடந்த சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தாய்லாந்து நாட்டின் இஷான் என்னும் பகுதியை சேர்ந்தவர் நரின். இவருக்கு தற்போது 47 வயதாகும் சூழலில் தனது மனைவியான 43 வயது சாவீவன் மீது புகார் ஒன்றை அளித்து நீதிமன்றத்தையும் நாடி உள்ளார்.

20 ஆண்டுகளாக நரின் மற்றும் சாவீவன் ஆகியோர் ஒன்றாக வாழ்ந்து வந்த சூழலில், கடந்த சில காலமாகவே அவர்களுக்கு இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல், விவாகரத்து செய்யவும் அவர்கள் முடிவு செய்திருந்ததாக தகவல்கள் கூறும் நிலையில், மற்றொரு அதிர்ச்சி சம்பவத்தையும் நரினின் மனைவியான சாவீவன் செய்துள்ளார்.

அதாவது, லாட்டரியில் சுமார் 300,000 பவுண்டுகளை சாவீவன் வென்றதுடன் அதனை கணவரிடம் இருந்தும் அவர் மறைத்துள்ளார். தனது மகள் மூலம் மனைவி பெரும் பரிசுத் தொகை வென்றது நரினுக்கு தெரிய வரவே அதிர்ச்சி அடைந்து போயுள்ளார். தென் கொரியாவில் வேலை செய்து வந்த நரின், மீண்டும் சொந்த ஊருக்கு திரும்ப இன்னும் பதறிப் போயுள்ளார். மனைவி சாவீவன் வீட்டை விட்டு வெளியேறியதுடன் வேறொரு திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

மாதாமாதம் மனைவியின் செலவுக்காக பணம் அனுப்பி வந்த நரினின் வங்கி கணக்கில் தற்போது குறைவான பணமே உள்ளது என்றும் இதனால் மனைவி வென்ற லாட்டரி பெருந்தொகையில் சரிபாதி தனக்கும் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை ஒன்றை நரின் முன் வைத்துள்ளார். தனது மனைவியால் இப்படி ஒரு நெருக்கடி சூழல் உருவாகும் என எதிர்பார்க்கவில்லை என குறிப்பிடும் நரின், முன்பே மனைவியை விவாகரத்து செய்யவும் திட்டம் போட்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஆனால் அதே வேளையில், கடந்த 20 ஆண்டுகளாக அவர்கள் குடும்பம் நடத்தி இருந்தாலும் முறையாக நரின் மற்றும் சாவீவன் ஆகியோர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் இதனால் அவர்களிடம் திருமண சான்றிதழ் எதுவுமில்லை என்றும் கூறப்படுகிறது. அதே வேளையில், இது பற்றி மனைவி சாவீவன் பேசுகையில், தாங்கள் பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவது அக்கம் பக்கத்தினருக்கு தெரியும் என்றும், இந்த விஷயத்தில் இனி நரின் தொல்லை தந்தால் அவதூறு புகார் அளிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தரப்பில் விசாரணை ஆரம்பமாகி உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றது.

Also Read | "கேட்ச் எடுக்குறப்போ இப்டியும் மேஜிக் பண்ண முடியுமா?".. பவுண்டரி லைனில் நடந்த அற்புதம்.. மெய்சிலிரித்து போன ரசிகர்கள்!!.. வீடியோ

Tags : #WOMAN #HUSBAND #LOTTERY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman leave her husband after won in lottery | World News.