"கேட்ச் எடுக்குறப்போ இப்டியும் மேஜிக் பண்ண முடியுமா?".. பவுண்டரி லைனில் நடந்த அற்புதம்.. மெய்சிலிரித்து போன ரசிகர்கள்!!.. வீடியோ

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Mar 27, 2023 01:11 PM

கிரிக்கெட் போட்டிக்கென உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். சர்வதேச போட்டிகள் தொடங்கி உள்ளூர் மற்றும் நகரங்களில் நடக்கும் போட்டிகள் வரை பெருவாரியான ரசிகர்கள் பின்பற்றக் கூடிய பழக்கத்தை கொண்டுள்ளனர்.

Two Fielders stunning catch near boundary line viral video

                          Images are subject to © copyright to their respective owners.

Also Read | T20 வரலாற்றுலேயே மிகப்பெரிய ரன் சேசிங்.. தென்னாப்பிரிக்க அணியின் இமாலய சாதனை..!

இதன் காரணமாக, அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் ஏராளமான கிரிக்கெட் வீடியோக்கள் வைரல் ஆவதை நாம் கவனித்திருப்போம். வித்தியாசமான கேட்ச்கள், வினோத ஃபீல்டிங் என கிரிக்கெட் தொடர்பான வீடியோக்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அப்படி இருக்கையில், தற்போது கிரிக்கெட் லீக் போட்டி ஒன்றில் ஃபீல்டர்கள் எடுத்த கேட்ச் தொடர்பான வீடியோ, கிரிக்கெட் ரசிகர்கள் பலரையும் வியந்து பார்க்க வைத்துள்ளது.

ஸ்பெயினில் தற்போது ஐரோப்பிய கிரிக்கெட் தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் சமீபத்தில் நடந்த போட்டி ஒன்றில், CIYMS கிரிக்கெட் கிளப் மற்றும் ட்ரூக்ஸ் அணிகள் மோதி இருந்தது. இந்த போட்டியில், ட்ரூக்ஸ் அணி வீரர் அகமது நபி அதிரடியாக ஆடி ரன் சேர்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் அடித்த பந்து ஒன்று நேராக பவுண்டரி லைனுக்கு அருகே சென்றது.

Two Fielders stunning catch near boundary line viral video

Images are subject to © copyright to their respective owners.

மேலும் இதனை பார்க்கும் போது பந்து நிச்சயம் சிக்ஸர் தான் என்றே அனைவரும் கருதினர். ஆனால், எல்லைக்கோட்டில் நின்ற ஃபீல்டர் வான்டெர் மெர்வ் அற்புதம் செய்தார். பந்தை பறந்து அந்தரத்தில் பிடித்த அவர், தான் பவுண்டரி லைனில் விழ போவதை அறிந்ததும் பந்தை உடனடியாக மைதானத்தில் வீசவும் செய்தார்.

அந்த சமயத்தில் வான்டெர் மெர்வ் அருகே ஓடி வந்த ஃபீல்டர் முல்டர், பந்தை பிடிக்கவும் செய்தார். ஆனால் ஓடி வந்த வேகத்தில் அவரும் பவுண்டரி லைனை நோக்கி சென்றதால், பந்தை மேலே போட்டு விட்டு பவுண்டரி லைனுக்குள் ஒரு காலை மட்டும் வைத்து விட்டு மீண்டும் சரியான பின் உள்ளே வந்து பந்தை கேட்ச் ஆக மாற்றி அங்கிருந்த ரசிகர்கள் அனைவரையும் மிரள வைத்திருந்தார். சில வினாடிகளில் நடந்து முடிந்த இந்த சம்பவம் தான் தற்போது பலர் மத்தியில் பேசு பொருளாக மாறி உள்ளது.

Two Fielders stunning catch near boundary line viral video

Images are subject to © copyright to their respective owners.

சமீப காலத்தில் கிரிக்கெட் வட்டாரத்தில் எடுக்கப்பட்ட மிகச்சிறந்த  கேட்ச்களில் ஒன்றாகவும் இது மாறி உள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கூட அதிக கவனம் பெற்று வருகிறது.

 

Also Read | "நம்பர் 18 நான் கேட்டு வாங்குனதில்ல, ஆனா".. ஜெர்சி நம்பர் பின்னாடி இப்டி ஒரு ரகசியமா?.. கலங்கிய விராட் ரசிகர்கள்!!

 

Tags : #CRICKET #TWO FIELDERS STUNNING CATCH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Two Fielders stunning catch near boundary line viral video | Sports News.