"பந்து அவருகிட்ட மாட்டிக்கிச்சா, இல்ல அவரு பந்துகிட்ட மாட்டிகிட்டாரான்னு தெரியலயே".. இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபொதுவாக கிரிக்கெட் போட்டிகளைக் காண உலக அளவில் ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். சர்வதேச போட்டிகள் ஆரம்பித்து உள்ளூரில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகள் வரை ரசித்து பார்ப்பதற்கு பலரும் இருக்கிறார்கள்.

Images are subject to © copyright to their respective owners.
இதன் காரணமாக, கிரிக்கெட்டை சுற்றி நடைபெறும் வேடிக்கையான, வினோதமான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் கூட இணையத்தில் அதிகம் பேசு பொருளாக மாறுவதை நாம் கவனித்திருப்போம்.
சமீபத்தில் கூட ஃபீல்டிங் நின்ற வீரர் ஒருவர், கால்பந்து போட்டியில் உதைப்பது போல தலைகீழாக டைவ் அடித்து பந்தை மிதித்து உள்ளே அனுப்பி இருந்தார். இது தொடர்பான வீடியோ பெரிய அளவில் பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தது.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூட இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து சில கருத்துக்களையும் குறிப்பிட்டுருந்தார். அப்படி இருக்கையில், தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் ஃபீல்டர் ஒருவர் வேடிக்கையாக ஃபீல்டிங் செய்தது தொடர்பான காட்சிகள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
இது தொடர்பான வீடியோவில், பேட்ஸ்மேன் அடித்த பந்து ஸ்லிப்பிற்கு அருகே செல்கிறது. அப்போது அங்கே ஃபீல்டிங்கில் நிற்கும் ஒருவர் பந்தை தவறவிட, அந்த பந்து பவுண்டரியை நோக்கி பின்னாடி சென்று கொண்டிருக்கிறது. இதனால், அவர் வேகமாக ஓடி பந்தை பிடிக்கவும் முயற்சி செய்கிறார். அந்த சமயத்தில் பவுண்டரி அருகே வரை சென்ற அவர் பந்தை பிடித்தாலும் திடீரென தடுமாறி கீழே விழுகிறார்.
Images are subject to © copyright to their respective owners.
இருந்த போதிலும், பந்தை நேரடியாக உள்ளே வீச வேண்டும் என்பதற்காக அவர் பந்தை வேகமாக வீச அது அவரது காலில் பட்டு பவுண்டரிக்கு சென்று விட்டது. மிகவும் கடினமாக ஓடி சென்று அந்த பந்தை பிடித்து அவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்த போதிலும், பவுண்டரியை அவர் காப்பாற்றி இருந்தார். ஆனாலும் தவறுதலாக அவர் காலை உயர்த்த அந்த சமயத்தில் பந்து காலில் பட்டு பவுண்டரிக்கு சென்றது தொடர்பான வீடியோ தான் தற்போது கிரிக்கெட் ரசிகர் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகின்றது.
Also Read | "இது நாட்டு நாட்டு வெர்ஷன் 2.0".. மேட்ச் நடுவுல ஒன்னா நடனமாடிய ஹர்பஜன், சுரேஷ் ரெய்னா.. Trending வீடியோ!!

மற்ற செய்திகள்
