'நானும் மனுஷி தான்'... 'கொஞ்சம் காசு, நிறைய கெட்ட பேரு'...மனதின் வலியை சொன்ன 'மியா'... வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Aug 16, 2019 10:31 AM

'மியா கலிஃபா' இந்த பெயருக்கு பெரிதாக அறிமுகம் தேவையில்லை. பல இளைஞர்களின் இரவை கலைத்த பெயர் என்று கூட சொல்லலாம். இவர் ஆபாசப் படங்களில் நடித்து கோடி கோடியாக சம்பாதித்தார் என்ற பேச்சு பரவலாக உண்டு. ஆனால் நாங்களும் மனிதர்கள் தான், எங்களுக்குள்ளும் ஆயிரம் வலிகள் இருக்கிறது, என்ற தனது ஆழ் மனது வலியை, அண்மையில் ஒரு யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டி மூலம் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

I made Rs 8 Lakhs in the Adult Film Industry Mia Khalifa Reveals

எழுத்தாளர்  மெகன் அப்பார்ட்டுக்கு மியா கலிபா அளித்த பேட்டியில் பல விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார். அதில் ''நான் ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்தி ஐந்தாண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்றுவரை ரேங்கிங்கில் இருக்கிறேன். இதில் மகிழ்ச்சிகொள்ள ஒன்றும் இல்லை. அந்தத் துறையில் பெண்களைச் சட்டபூர்வமாக ஒப்பந்தம்செய்து சிக்கவைப்பார்கள். ஒவ்வொருவரின் பொருளாதாரத் தேவையை அறிந்துகொண்டு இப்படிப்பட்ட குறைவான சம்பளத்துக்கு ஒப்பந்தம் செய்கிறார்கள். பார்ன் ஸ்டாராக இருந்ததற்கு நான் ஒன்றும் பெருமை கொள்ளவில்லை என கூறும் மியா, பொருளாதார நிலையால் அந்த நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறியுள்ளார்.

தனது முதல் பார்ன் அனுபவம் குறித்து பகிர்ந்த அவர் '' முதல் முறையாக நடிக்கும் போது தனது நண்பர்களுக்கு தெரிந்து விட கூடாது என்ற பயத்திலேயே நடித்ததாக கூறியுள்ளார். ஆனால் அதையும்தாண்டி அவர்களின் நண்பர்களுக்கு தெரிந்து விட அவமானத்தில் கூனி குறுகி போயியுள்ளார். இந்நிலையில் லெபனான் - அமெரிக்கா குடும்பத்தைச் சேர்ந்த மியா கலிஃபா, அவர் பின்பற்றும் மதத்திற்கு எதிராக ஆபாச திரைப்படங்களில் நடிப்பதாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது. சாதாரணமாக திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கே மிரட்டல், கிண்டல், விமர்சனங்கள் என தொடரும் சூழ்நிலையில் மியா கலிஃபா எதிர்கொண்ட விமர்சனங்கள், மிரட்டல்கள், அவமானங்களை யோசித்துக்கூட பார்க்க முடியாதது.

இதனிடையே தலையைத் தனியாக வெட்டியதுபோல் போட்டோஷாப் செய்யப்பட்ட ஒரு படத்தை மியாவுக்கு அனுப்பிய ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கம், அவருடைய வீட்டை கூகுள் மேப்பில் குறிப்பிட்டு ஒரு ஸ்கிரீன்ஷாட்டையும் அனுப்பியது. இதனால் பயத்தில் உறைந்த மியா, இரண்டு வாரங்களுக்கு ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்துத் தங்கியுள்ளார். அதன் பிறகு அவரை கிண்டல் மற்றும் ட்ரோல் செய்பவர்களை பக்குவமாக எதிர்கொள்ள தைரியம் வந்ததாக கூறும் மியா, ஐ.எஸ்.ஐ.எஸ் மிரட்டலையே பார்த்து விட்டேன், இதற்கு மேல் என்ன இருக்கிறது என தைரியத்துடன் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஆபாசப் பட உலகின் லேடி சூப்பர்ஸ்டாராக இருந்தும்,, இதுவரை ஆபாச படங்களில் நடித்து மொத்தம் 12,000 டாலர்கள் மட்டுமே சம்பாதித்ததாக மியா கூறியுள்ளார்.. இந்திய மதிப்பில்  கிட்டத்தட்ட 8.5 லட்சம் மட்டுமே. மியா கலிஃபாவை ட்விட்டர், முகநூல் என சமூகவலைதளங்களில் இழிவுபடுத்துகிறவர்கள் எல்லோருமே பெரும்பாலும் மியாவின் வீடியோவைப் பார்த்தவர்களாகத்தான் இருக்கின்றனர். அவரின் நிர்வாண படங்களை ஏற்று கொண்டவர்கள் இன்று அவரை ஏற்று கொள்ள மறுக்கிறார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை.

பல பேர் மியா கலிஃபா வீடியோகளை பார்த்திருக்கலாம் அல்லது பார்க்காமல் கூட இருந்திருக்கலாம். ஆனால் ஒரு பெண்ணின் ஆழ்மனது ரணத்தை கூறும் இந்த வீடியோ நிச்சயம் கொடுமையானது. சமூகத்தின் எழுதப்படாத விதிகளில் சிக்கி இழிவை சந்தித்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் குரல் தான் இந்த நேர்காணல்.

Tags : #MIA KHALIFA #ADULT FILM INDUSTRY #PORN