VIDEO: ‘அண்ணா நீங்க அவரோட ரசிகரா..?’.. சிரிச்சுக்கிட்டே தோசை ‘மாஸ்டர்’ சொன்ன பதில்.. வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Feb 23, 2021 11:44 AM

தோசையை வேகமாக சுட்டு அதை தட்டில் வைத்து பறக்க விடும் நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Man’s superb dosa making skills video goes viral

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள ஹிந்த்மாதா அடுத்த தாதர் பகுதியில் ‘முத்து அண்ணா தோசா’ என்ற சாலையோர உணவகம் உள்ளது. இந்த உணவகத்தில் தோசை சுடும் மாஸ்டர் முத்து, வேகவேகமாக தோசையை சுட்டு, அதை தட்டில் வைத்து ஊழியர் ஒருவரிடம் ஸ்டைலாக பறக்கவிடுகிறார்.

அப்போது கடைக்கு வந்திருந்த வாடிக்கையாளர் ஒருவர், ஸ்டைலாக வேலை செய்கிறீர்கள், நீங்கள் ரஜினி ரசிகரா? என கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் ‘ஆமாம், தலைவர் ரசிகன்’ என பதிலளித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

முன்னதாக இதேபோல் இளைஞர் ஒருவர் தோசை சுட்டு அதை வாடிக்கையாளரின் தட்டுக்கே பறக்க விட்ட வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

Tags : #DOSA #VIRAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man’s superb dosa making skills video goes viral | India News.