"உங்க BAG'அ செக் பண்ணனும்.." விமானத்தில் ஏறிய பெண்ணுக்கு நடுங்க ஆரம்பித்த கை.. "கடைசி'ல ஒரு SURPRISE குடுத்தாங்க பாருங்க.."

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Jun 30, 2022 08:34 PM

தான் நேசிக்கும் ஒருவரிடம் தனது காதலை வெளிப்படுத்த, பல சர்ப்ரைஸ் பிளான்களை உருவாக்க எந்த ஒரு எல்லை வரையும் செல்வதற்கும் சிலர் தயாராக இருப்பார்கள்.

Man proposes his girlfriend with a prank before surprise

Also Read | "மகனின் Ex கேர்ள் ஃபரண்ட்.. இப்போ அப்பாவின் மனைவி.." 24 வயது இடைவெளி.. வியப்பை ஏற்படுத்தும் காதல் ஜோடி..

அப்படி மிகவும் சர்ப்ரைஸாக ஒருவர் வெளிப்படுத்தும் காதலின் தருணம், ஆண்டுகள் கடந்து அவரின் வாழ்நாள் முழுவதும் பொன்னான தருணமாக இருக்கும்.

இது போன்ற சர்ப்ரைஸ் ஆக காதலை வெளிப்படுத்துவது தொடர்பாக, நிறைய வித்தியாசமான வீடியோக்களை நாம் இணையத்தில் அதிகம் பார்த்திருப்போம்.

இப்படியும் Propose பண்ணலாம்..

அந்த வகையில், தற்போது ஒரு லவ் மற்றும் திருமண ப்ரோபோசல் வீடியோவும் இணையத்தில் வெளியாகி, அதிக லைக்குகளை அள்ளி வருகிறது. இளம்பெண் ஒருவர் பெங்களூர் செல்லும் விமானத்தில் ஏறி உள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து அந்த விமானத்தில் இளம் பெண் ஏறி உள்ளே வரவே, விமான குழு உறுப்பினர்களில் ஒருவர், அவரின் பைக்குள் போதை பொருள் இருப்பதாக கூறி பரிசோதிக்க வேண்டும் என தெரிவிக்கிறார். தனது பையில் போதைப் பொருள் இருப்பதாக விமான ஊழியர் கூறவே, அந்த பெண்ணின் கையும் நடுங்க ஆரம்பிக்கிறது. தொடர்ந்து உங்களின் இடது பக்கம் பாருங்கள் என அந்த ஊழியரும் கூறவே, அவரின் நெருங்கிய ஆண் நண்பர், கையில் பூக்கள் மற்றும் Engagement மோதிரத்துடன் அங்கு நிற்க, இதனை பார்த்ததும் ஒரு நிமிடம் தலை சுற்றியே போனார் அந்த இளம் பெண்.

Man proposes his girlfriend with a prank before surprise

இளைஞர் போட்ட மாஸ்டர் பிளான்

இது தொடர்பான வீடியோவை, அந்த இளைஞரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், இதனை எப்படி அவர் பிளான் செய்தார் என்பது பற்றியும், கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, பெங்களூரு விமான நிலையத்தில் இறங்கும் போது, அந்த இளம்பெண்ணை சந்திப்பதாக அந்த இளைஞர் கூறி உள்ளார். அப்படி கூறிவிட்டு, அந்த பெண்ணிற்கு தெரியாமல், அவர் ஏறிய விமானத்தில் டிக்கெட்டையும் அந்த இளைஞர் எடுத்து ஏறி உள்ளார். அது மட்டுமில்லாமல், அந்த இளம் பெண்ணுக்கு முன்பாகவே விமானத்தில் ஏறி, அங்கிருந்த ஊழியர்களிடம் தனது திட்டத்தைக் கூறி, இளம்பெண்ணிடம் போதைப் பொருள் உள்ளதாக சந்தேகப்பட்டு பையினை சோதனை செய்யுமாறும் அவர் கூறியுள்ளார். இறுதியில் தான் திட்டமிட்டது போலவே, அனைத்தும் நடைபெற பூக்கள் மற்றும் Engagement மோதிரத்தை கொடுத்து அசத்தலான சர்ப்ரைஸ் ஒன்றையும் தனது கேர்ள் ஃபிரண்ட்டுக்கு கொடுத்துள்ளார் அந்த இளைஞர்.

Man proposes his girlfriend with a prank before surprise

அதே போல, அங்கிருந்த ஊழியர் ஒருவர் அவர்களின் காதலுக்கு வாழ்த்து கூறி, மைக்கிலும் அறிவித்ததாக அந்த இளைஞர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ கடந்த சில தினங்களுக்கு முன் பகிரப்பட்டிருந்த நிலையில், பலரும் அசத்தலான கமெண்ட்களை வெளியிட்டு வருகின்றனர்.

Also Read | "அட அட, இது அல்லவோ ஃபேஷன் Walk.." Miss World'க்கே ஜோடி போடுவோமா ஜோடி'ன்னு தயாராகும் இளைஞர்.. யாருயா நீ?

Tags : #MAN #PROPOSES #GIRLFRIEND #MAN PROPOSES HIS GIRLFRIEND #SURPRISE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man proposes his girlfriend with a prank before surprise | India News.