"இத விட என்ன பாக்கியம் கெடச்சுட போகுது.." மணப்பெண்ணுக்கு சகோதரன் கொடுத்த சர்ப்ரைஸ்.. மனம் உருகி போன நெட்டிசன்கள்
முகப்பு > செய்திகள் > இந்தியாசகோதரியின் திருமணத்தின் போது, அவரது சகோதரர் கொடுத்த மறக்க முடியாத பரிசும், அதனைக் கண்டு நெகிழ்ந்து போய் குடும்பத்தினர் அனைவரும் கண்ணீர் விட்டது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு, உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், உலக மக்கள் அனைவரையும் கடுமையாக அச்சுறுத்தி இருந்தது.
இதன் காரணமாக, தங்களின் வாழ்வாதாரங்களையும் பலர் இழந்து தவித்தனர். மேலும், லட்சக்கணக்கான மக்கள் இதனால் பாத்திக்கப்பட்டு, உயிரிழக்கவும் செய்திருந்தனர்.
சகோதரன் கொடுத்த சர்ப்ரைஸ்
அந்த வகையில், இந்தியாவைச் சேர்ந்த ஆவுலா சுப்பிரமணியம் என்பவரும், கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவரது ஆக்ஸிஜன் அளவு குறைய ஆரம்பிக்கவே, சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தும் போனார் சுப்பிரமணியம். இதனை அறிந்து, அவரது குடும்பத்தினர் அனைவரும் கதறித் துடித்துள்ளனர்.
மனம் உடைந்த குடும்பத்தினர்
இதனைத் தொடர்ந்து, தற்போது சுப்பிரமணியத்தின் மகளின் திருமணம் நடைபெற்ற நிலையில், அவரது சகோதரரான ஆவுலா பாணி கொடுத்த சர்ப்ரைஸ் தான் இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது. இது தொடர்பாக இணையத்தில் வலம் வரும் திருமண வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது விவரம் சரிவர தெரியவில்லை. இந்த வீடியோவில், சுப்பிரமணியத்தின் மகள் மணப்பெண்ணாக மேடையில் நிற்க, அவரது சகோதரரான ஆவுலா பாணி, தனது தந்தை ஆவுலா சுப்ரமணியத்தின் தத்ரூபமான மெழுகு சிலையை சர்ப்ரைஸாக வீல் சேரில் உட்கார வைத்து, மேடைக்கு கொண்டு வருகிறார். கொஞ்சம் கூட இதனை எதிர்பார்க்காத மணப்பெண், ஆனந்தக் கண்ணீர் விடவே அங்கிருந்த அனைவரும் ஒரு நிமிடம் மனம் உடைந்து போயினர்.
வைரலாகும் உருக்கமான நிகழ்வு
தன்னுடைய திருமணத்திற்கு தந்தை இல்லை என்ற குறையை சகோதரர் ஆவுலா பாணி தீர்த்து வைத்த நிலையில், அங்கிருந்த அனைவரும் ஆவலா சுப்பிரமணியத்தின் மெழுகு சிலையை கட்டி அணைத்துக் கொண்டு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு, ஆனந்த கண்ணீரும் விட்டனர். சில நிமிடங்கள் அந்த இடமே உணர்ச்சி பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது.
தந்தை சுப்ரமணியத்தின் சிலையை கர்நாடகாவில் உருவாக்க, சுமார் ஒரு ஆண்டு வரை எடுத்துக் கொண்டதாக ஆவுலா பாணி தெரிவித்துள்ளார். இறந்து போன தந்தையின் உடலை மெழுகு சிலையாக வடிவமைத்து, சகோதரி உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரையும் உருக வைத்த சகோதரன் குறித்து நெட்டிசன்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Also Read | ரொட்டிக்காக வந்த தகராறு.. பிறந்தநாள் அன்னிக்கு வாலிபருக்கு நேர்ந்த பயங்கரம்..!

மற்ற செய்திகள்
