உங்க நேர்மை பிடிச்சிருக்கு.. "இப்படி ஒரு லீவ் லெட்டரை நான் பார்த்ததே இல்லை".. மேனேஜர் பகிர்ந்த புகைப்படம்.. யாரு சாமி நீ?
முகப்பு > செய்திகள் > இந்தியாபணியாளர் ஒருவர் தனக்கு விடுப்பு வேண்டும் என மேலதிகாரி ஒருவருக்கு அனுப்பியுள்ள கடிதம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நிறுவனங்களில் வேலை செய்யும் பணியாளர்கள் விடுமுறை பெற பல்வேறு சுவாரஸ்ய காரணங்களை சொல்வதை கேள்விப்பட்டிருப்போம். பெரும்பாலும் எமோஷனலான காரணங்களை சொல்லி விடுமுறை கேட்பதையே பலரும் யுக்தியாக கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில் தனது மேலதிகாரியிடம் வித்தியாசமான காரணத்தை கூறி, விடுமுறை கேட்டிருக்கிறார் பணியாளர் ஒருவர். அந்த மின்னஞ்சலின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ராஜினாமா
காவேரி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ராஜினாமா கடிதத்தை பகிர்ந்திருந்தார். அதில், "ராஜினாமா கடிதம்" என குறிப்பிட்டு அந்த நபர் "பை பை சார்" என எழுதியுள்ளார். அந்த பதிவில் காவேரி,"ஷார்ட் அண்ட் ஸ்வீட்" என பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இதில் கமெண்ட் போட்டுள்ள ஷாஹில் என்பவர் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.
அதில், "எனது ஜுனியர்கள் மிகவும் இனிமையானவர்கள். வேறு ஒரு நேர்காணலுக்கு செல்ல விடுமுறை கேட்பார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
விடுமுறை
ஷாஹில் பகிரந்துள்ள அந்த கடிதத்தில்,"விடுமுறை வேண்டி இந்த மின்னஞ்சலை அனுப்பியுள்ளேன். வேறு ஒரு நிறுவனத்தில் நடைபெற இருக்கும் நேர்காணலுக்கு செல்ல இருப்பதால் எனக்கு விடுமுறை தேவை. என்னுடைய கோரிக்கையை ஏற்று விடுப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார் அந்த நபர்.
My juniors are so sweet, asking me for leave to attend an interview. 😉😁 pic.twitter.com/gcBELHIuAG
— Sahil (@s5sahil) June 15, 2022
இந்த விடுப்பு விண்ணப்பம் பலரையும் வியப்படைய செய்திருக்கிறது. மேலும், "எவ்வளவு நேர்மையுடன் அந்த ஊழியர் நடந்துகொள்கிறார். அப்படியானால் உங்களது நிறுவனத்துக்குத்தான் பாராட்டுக்கள் சொல்ல வேண்டும்" என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். இதுபோல தங்களது வாழ்வில் சந்தித்த இதுமாதிரியான நிகழ்வுகள் குறித்தும் நெட்டிசன்கள் கமெண்டாக பதிவிட்டு வருகின்றனர்.
வேறு ஒரு நிறுவனத்தில் நேர்காணலுக்கு செல்ல இருப்பதால் தனக்கு விடுமுறை வேண்டும் என ஊழியர் ஒருவர் விண்ணப்பித்திருந்த மின்னஞ்சல் புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மற்ற செய்திகள்
