ரோட்ல படுத்திருந்த பெரிய சைஸ் பாம்பு.. இறங்கி போனவரு அசால்டா செஞ்ச விஷயம்.. VIRAL VIDEO
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்த உலகில் நம்மை சுற்றி நடக்கும் ஏராளமான விஷயங்கள் மற்றும் நிகழ்வுகளை சமூக வலைத்தளம் மூலமே நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.
ஒரு சில நேரத்தில், மிக மிக வித்தியாசமான அல்லது வினோதமான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் அல்லது புகைப்படங்கள் வெளியாகி, இணையவாசிகள் மத்தியில் அதிக அளவில் வைரலாகும்.
அதே வேளையில், சில சமயம் வைரலாகும் வீடியோக்கள், அப்படியே நம்மை ஒரு நிமிடம் அதிர்ச்சியிலும், கடும் பீதியிலும் கூட உறைந்து போக வைக்கும். அந்த வகையில் ஒரு வீடியோ தான், தற்போது இணையத்தில் வெளியாகி பார்ப்போர் பலரையும் பதற்றம் அடைய வைத்துள்ளது.
இணையத்தில் வைரலாகும் வீடியோக்களில், விலங்குகள் மற்றும் உயிரினங்கள் தொடர்பாக பார்ப்பவர்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தக் கூடிய வீடியோக்கள், நிறைய சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதை நாம் பார்த்திருப்போம். அப்படி ஒரு வீடியோவை தான் இந்திய வனத்துறை அதிகாரியான பர்வீன் கஸ்வான் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பர்வீன் பகிர்ந்த வீடியோவில், நபர் ஒருவர் வாகனத்தில் இருந்து இறங்கி, சாலைக்கு நடுவே கிடக்கும் பாம்பை நோக்கி செல்கிறார். மேலும், அதன் அருகே சென்று பாம்பின் வாலை பிடித்த அந்த நபர், அதனை காட்டை நோக்கி நகர்த்தி போடுகிறார். உடனடியாக, அந்த பாம்பும் அங்கிருந்து வேகமாக ஊர்ந்து காட்டுக்குள் செல்கிறது.
முன்னதாக, அந்த நபர் பாம்பின் வாலை சர்வ சாதாரணமாக பிடித்த போது, பின்னால் வாகனத்தில் இருந்த மக்கள் அனைவரும் அவரை அருகே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி, கத்தி கூச்சல் போடுவதும் அதில் கேட்கிறது.
இதனை பகிர்ந்த அதிகாரி பர்வீன் கஸ்வான், வன விலங்குகளின் வாழ்விடத்திற்கு சென்று அதனை தொந்தரவு செய்கிறாரா அல்லது விபத்து நேராமல் இருக்க அதனை காப்பாற்றுகிறரா என குறிப்பிட்டு உங்கள் பார்வை என்ன என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளார். மேலும், தென் இந்திய பகுதியில் உள்ள காட்டில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Your views on it. Going in wildlife habitat & disturbing or saving it from road accident. Video is from important wildlife habitual in south India. @BoskyKhanna pic.twitter.com/7W110lg3CD
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) September 30, 2022
மிகவும் சாதாரணமாக நடு ரோட்டில் சென்று பாம்பை சாலையில் இருந்து அகற்றும் நபர் தொடர்பான வீடியோ, பார்ப்போர் பலரையும் சில்லிட வைத்துள்ளது.