"அவரு இறந்துட்டாரு".. உடல் உறுப்புகளை அகற்ற தயாரான மருத்துவர்கள்.. வேகமாக வந்த மனைவி சொன்ன பரபரப்பு விஷயம்!!
முகப்பு > செய்திகள் > உலகம்வாலிபர் ஒருவர் மூளைச் சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் பின்னர் அரங்கேறிய சம்பவம், கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் நார்த் கரோலினா பகுதியை சேர்ந்தவர் Ryan Marlow. இவர் Listeria என்னும் பாக்டீரியா மூலம் அவதிப்பட்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக அதே பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றிலும் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும், அவர் கோமாவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
37 வயதாகும் ரியானுக்கு 3 குழந்தைகளும் உள்ளனர். இவரது மூளையில் வீக்கம் ஏற்பட்ட ஆரம்பித்த பிறகு, அவரது உடல்நிலை மோசமாக ஆரம்பித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதன் காரணமாக, அவர் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையின் மருத்துவர்கள், அவர் உயிர் பிழைப்பது கடினம் என்றும் அறிவித்ததாக கூறப்படுகிறது. அசுத்தமான உணவுகள் உண்பதால் ஏற்படும் Listeria என்னும் பாக்டீரியா காரணமாக ரியானுக்கு நேர்ந்த இந்த நிலை, கடும் வேதனையை அவர்கள் குடும்பத்தினர் மத்தியில் உருவாக்கி இருந்தது.
கணவரின் நிலையால், அவரது மனைவி Megan கதறித் துடித்துள்ளார். இதனிடையே, சமீபத்தில் ரியான் மூளை சாவு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாகவும் மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இதனையடுத்து, தனது உடலை ரியான் தானம் செய்திருந்ததால், உடல் உறுப்புகளை எடுக்கவும் மருத்துவ குழு தயாராகி உள்ளது. அப்படி இருக்கையில் தான், ரியான் விவகாரத்தில் பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது.
அதாவது, உறவினர் ஒருவர் ரியானின் உடலில் அசைவு இருந்ததை கண்டு அதனை மேகனிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது பற்றி, மேகனும் மருத்துவரிடம் தகவல் தெரிவிக்கையில், CT ஸ்கேன் எடுத்து பார்த்துள்ளனர். அப்போது தான், ரியானின் மூளை செயல்படுவது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக, மருத்துவர்கள் தவறாக அறிவித்ததும் தெரிய வந்தது.
இதனிடையே, ஸ்கேன் செய்து பார்த்ததில் இருந்து ரியானின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை என்றாலும், அவரது இதய துடிப்பு இருக்கும் அறிகுறிகளும் தென்படுவதாக கூறப்படுகிறது. உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என்றாலும், வேறு மருத்துவமனையில் கணவரை மாற்றவும் மேகன் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
மூளைச்சாவு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்ட வாலிபரின் உடல் உறுப்புகளை எடுக்க தயாரான சமயத்தில் அவர் இறக்கவில்லை என்பது அறியப்பட்ட சம்பவம், கடும் அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.

மற்ற செய்திகள்
