"நீங்க இங்க என்ன பாஸ் பண்றீங்க??".. கழிவறைக்கு செல்ல முயன்ற நபர்.. கோப்பைக்குள் பார்த்த அதிர்ச்சி.. "ஒரு நிமிஷம் ஈர கொலயே நடுங்கி போச்சு"
முகப்பு > செய்திகள் > உலகம்அவ்வப்போது இணையத்தில் ஏதாவது அதிர்ச்சிகரமான அல்லது வினோதம் என பல விஷயங்களை அடக்கிய வகைகளில் செய்திகள், புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் அதிகம் வைரல் ஆவதை நாம் பார்த்திருப்போம்.

அந்த வகையில், தற்போது இணையத்தில் வெளியாகி உள்ள புகைப்படம் ஒன்று பலரையும் மிரண்டு போக வைத்துள்ளது.
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் அமைந்துள்ள பகுதி யூஃபாலா (Eufaula). இங்கே ஒரு குடும்பம் வாழ்ந்து வரும் நிலையில், அவர்களது வீட்டில் தான் பரபரப்பு சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக அவர்களின் வீட்டிற்குள் ஏதோ ஊர்ந்து போவதை பார்த்ததாக வீட்டில் இருந்தவர்கள் உணர்ந்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னர், அவர்கள் வீட்டிற்குள் தேடி பார்த்த போது எதுவும் புலப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனைத் தொடர்ந்து, அடுத்த சில மணி நேரங்கள் கழித்து அந்த வீட்டில் இருந்த ஒருவர், கழிவறைக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. அந்த சமயத்தில் கடும் அதிர்ச்சி ஒன்று அவருக்கு காத்திருந்துள்ளது. கழிவறையின் கோப்பைக்குள் ஒரு பாம்பு இருந்ததை கண்டு ஒரு நிமிடம் அரண்டு போயுள்ளார். இதனை பற்றி குடும்பத்தினர் அனைவருக்கும் அவர் தகவல் கொடுக்கவே, உடனடியாக அப்பகுதி போலீசாருக்கும் அழைத்து விவரத்தை கூறி உள்ளனர்.
இதன் பின்னர், பாம்பு இருக்கும் வீட்டிற்கு வந்த போலீசார், கழிவறையில் இருந்த பாம்பை உயிருடன் மீட்டு அதனை பத்திரமான பகுதிக்கு கொண்டு விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் பின்னர், கழிவறை கோப்பைக்குள் பாம்பு இருந்த புகைப்படத்தையும் போலீசார் தங்களின் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
மேலும் தங்களின் கேப்ஷனில், "ஒரு நாள் முதல் அடுத்த நாள் வரை, எங்கள் ஷிப்ட்டின் போது எந்த வகையான அழைப்பு வரும் என்பது எங்களுக்கே தெரியாது. இன்றும் அதற்கு விதிவிலக்கல்ல. கழிவறையில் பாம்பு இருக்கும் என்பது எங்கள் பட்டியலில் இல்லாத ஒன்று" என குறிப்பிட்டுள்ளனர். மேலும், அந்த பாம்பு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையை சார்ந்தது என்றும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பான புகைப்படங்கள், தற்போது இணையத்தில் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பலரும் இனிமேல் கழிவறைக்கு செல்லும் போது கவனமாக செல்வோம் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
