தெலுங்கானாவில் திம்சா நடனமாடிய ராகுல் காந்தி.. அசந்துபோன பொதுமக்கள்.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி நடைப்பயணத்தின்போது பழங்குடி மக்களுடன் இணைந்து பாரம்பரிய நடனம் ஆடி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் எம்பியும் அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி ஜோடோ யாத்திரையை துவங்கினார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான மக்களை ஒன்றிணைக்கும் நோக்கில் இந்த யாத்திரையை மேற்கொண்டுவருகிறார் ராகுல் காந்தி. கன்னியாகுமரியின் காந்தி மண்டபத்தில் யாத்திரையை துவங்கிய ராகுல் காந்தி கடந்த 11 ஆம் தேதி கேரள எல்லையில் உள்ள முலகுமூடு கிராமத்திற்கு சென்றடைந்தார். அதன்பிறகு கர்நாடகம், ஆந்திர பிரதேசம் வழியாக பயணம் மேற்கொண்ட அவர் தற்போது தெலுங்கானாவில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள ஒற்றுமை பயணத்தில் அரசியல் பொதுக்குழு கூட்டங்கள் எதையும் நடத்தப்போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 150 நாட்களில் 3,570 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டு காஷ்மீரை அடையவுள்ள ராகுல் காந்தி, செல்லும் வழியெங்கும் மக்களை சந்தித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது தெலுங்கானாவில் நடைபயணம் மேற்கொண்டவரும் ராகுல் காந்தி, பழங்குடி மக்களுடன் இணைந்து திம்சா நடனமாடினார். ஆந்திரா, ஒடிசா மற்றும் தெலுங்கானாவில் வாழும் பழங்குடி இன மக்களின் பாரம்பரிய நடனம் இந்த திம்சா. இதனை அம்மக்களுடன் இணைந்து அவர் நடனமாட அங்கிருந்தோர் இதனை ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.
இந்நிலையில், இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. முன்னதாக கேரளாவில் படகுப் போட்டியில் கலந்துகொண்டு அசத்தினார் ராகுல் காந்தி. பின்னர் கர்நாடகாவில் சிறுவன் ஒருவருடன் போட்டிபோட்டு புஷ் அப் செய்த வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.
जब Dhimsa की ताल पर ताल मिलाई @RahulGandhi ने...
तेलंगाना के लोक नृत्य ने बिखरे अपने रंग।#BharatJodoYatra pic.twitter.com/RwFolU6n1H
— Congress (@INCIndia) November 3, 2022
Also Read | வரதட்சணையாக கிடைத்த கார்.. கல்யாணம் பண்ண கையோட மாப்பிள்ளை செஞ்ச விஷயம்.. சோகத்தில் மூழ்கிய திருமண வீடு..!