"இந்தியா தோத்தா ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்தவர கல்யாணம் பண்றேன்".. நடிகையின் பரபரப்பு ட்வீட்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Nov 03, 2022 05:24 PM

டி 20 உலக கோப்பை தொடர் தற்போது மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது.

pakistan actress sehar shinwari tweets about india vs zimbabwe match

Also Read | இறப்பதற்கு முன் மலை உச்சியில் செல்ஃபி எடுத்த மனைவி.. கைதான கணவர்.. என்ன நடந்தது.? உறைய வைக்கும் பின்னணி!!

மொத்தமுள்ள 12 அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு சூப்பர் 12 சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

மேலும், ஏறக்குறைய அனைத்து அணிகளுமே அரை இறுதி சுற்றுக்கு முன்னேறவும் கடுமையாக போராடி வருகிறது.

இதன் காரணமாக அனைத்து போட்டிகளுமே ரசிகர்கள் மத்தியில் அதிக ஆவலையும் ஏற்படுத்தி உள்ளது. இதில், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, இதுவரை 4 போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றி கண்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளை முதல் இரண்டு போட்டிகளில் வீழ்த்தி இருந்த இந்தியா, மூன்றாவது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியிடம் தோல்வியை தழுவி இருந்தது.

pakistan actress sehar shinwari tweets about india vs zimbabwe match

இதனைத் தொடர்ந்து, நான்காவது போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொண்ட இந்தியா, த்ரில் வெற்றி பெற்றிருந்தது. இனி ஒரு போட்டி மட்டுமே இந்திய கிரிக்கெட் அணிக்கு மீதம் உள்ளதால், அரை இறுதி வாய்ப்பும் பிரகாசமாக இருப்பதாகவே கருதப்படுகிறது. மேலும், தங்களின் கடைசி சூப்பர் 12 சுற்று போட்டியில் ஜிம்பாப்வே அணியை நவம்பர் 6 ஆம் தேதி எதிர்கொள்கிறது இந்திய அணி.

இந்த நிலையில், பாகிஸ்தான் நடிகையான ஷெகர் ஷின்வாரி (Sehar Shinwari)  என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் போட்டி குறித்து செய்த ட்வீட் ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

pakistan actress sehar shinwari tweets about india vs zimbabwe match

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த நடிகை ஷெகர் ஷின்வாரி, இந்திய கிரிக்கெட் போட்டிகள் ஆடும் போது பல ட்வீட்களை செய்து அதிக கவனம் பெற்று வந்தவர் ஆவார். அந்த வகையில், தற்போது இந்தியா மற்றும் ஜிம்பாப்வே மோதும் போட்டி குறித்தும் பரபரப்பான ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில், "அடுத்த போட்டியில் இந்திய அணியை அற்புதமாக ஜிம்பாப்வே வீழ்த்தினால் நான் ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொள்வேன்" என குறிப்பிட்டுள்ளார்.

pakistan actress sehar shinwari tweets about india vs zimbabwe match

இது தொடர்பான ட்வீட், தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்தை அதிகம் பெற்று வரும் நிலையில், பலரும் பல விதமான கருத்துகளையும் குறிப்பிட்டு வருகின்றனர்.

Also Read | மோதிரம் மாற்றி திருமணம்.. ரகசியம் காத்த இருநாட்டு அழகிகள்.. "வீடியோ ஷேர் பண்ணி சீக்ரெட்ஸ் உடைச்சுட்டாங்க"

Tags : #CRICKET #INDIA VS ZIMBABWE #PAKISTAN ACTRESS #PAKISTAN ACTRESS SEHAR SHINWARI #T20 WORLD CUP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Pakistan actress sehar shinwari tweets about india vs zimbabwe match | Sports News.