"ரியல் பாகுபலிப்பா.!!".. புல்லுக்கட்டு மாதிரி பைக்க தூக்கி பஸ்க்கு டாப்ல போடுறாப்ல.... வீடியோ..
முகப்பு > செய்திகள் > இந்தியாஅவ்வப்போது இணையத்தில் நாம் நேரத்தை உலவிடும் போது நம்மை சுற்றி நடக்கும் ஏராளமான விஷயங்கள் குறித்து நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.
![man climbs bike on his head in bus ladder video amazed people man climbs bike on his head in bus ladder video amazed people](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/man-climbs-bike-on-his-head-in-bus-ladder-video-amazed-people.jpg)
அது மட்டுமில்லாமல், தினமும் சமூக வலைத்தளஙகளில் மக்கள் மத்தியில் பேசு பொருளாக மாறுவது குறித்தும் நாம் அறிந்து கொள்ளலாம். இதில் அதிர்ச்சகரமான, வினோதமான, மனதை கவரும் வகையில் என வித விதமான வீடியோக்கள் குறித்தும் நாம் காண்போம்.
அப்படி ஒரு சூழலில் தற்போது இணையத்தையே கலக்கி வரும் வீடியோ ஒன்று, பலரையும் மிரண்டு போக வைத்துள்ளது.
இது தொடர்பாக வெளியான வீடியோ ஒன்றில், நபர் ஒருவர் பேருந்தின் மீது ஏணி ஒன்றை வைத்து ஏறுகிறார். வெறுமென ஏறிச் செல்லாமல், தலையில் கனரக மோட்டார் சைக்கிள் ஒன்றை வைத்துக் கொண்டு மிகவும் அற்புதமாக பார்ப்போரை ஆச்சரியத்தில் உறைய வைக்கும் வகையில் அந்த நபர் ஏணியில் ஏறி மேலே போகிறார்.
அதிலும் குறிப்பாக, பேருந்து மீது சாய்த்து வைக்கப்பட்டுள்ள ஏணிகளில் ஏறும் போது அந்த நபர் பைக் மீது கையே வைக்கவில்லை. ஏணி மீது கைவைத்த படி, நிதானமாக நடந்து மேலே ஏறி பைக்கை கொண்டு செல்கிறார். அதிக கனமுள்ள மோட்டார் சைக்கிளை நேராக தலையில் வைத்து தூக்குவது என்பதே மிகவும் கடினமான ஒரு விஷயம். ஆனால், அப்படி தலையில் வைத்ததுடன் மட்டுமில்லாமல், நேராக ஏணி படிகளில் ஏறி பேருந்து மீது அவர் ஏறிச் செல்லும் விஷயமும் பலரை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
மறுபக்கம் அந்த வைரல் வீடியோவில் கூட, அவர் பைக்கை தலையில் வைத்துக் கொண்டு பேருந்தின் மீது ஏறும் போது, அங்கே சுற்றி நின்று பார்க்கும் பலரும் ஒரு விதம் மெர்சல் ஆகி தான் நிற்கவும் செய்கின்றனர். தற்போது இணையத்தை கலக்கி வரும் இந்த வீடியோ, ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பேருந்து நிலையம் ஒன்றில் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அதே போல, எப்போது இந்த சம்பவம் நடைபெற்றது என்பது குறித்த விவரம் சரிவர தெரியவில்லை என்றும் தெரிகிறது. மேலும் இந்த வீடியோவை பார்க்கும் மக்கள் பலரும் அந்த நபரை 'சூப்பர்மேன்' என்றும் 'பாகுபலி' என்றும் பல வார்த்தைகளை குறிப்பிட்டு வருகின்றனர்.
They are really super human 👏🔥❤️ pic.twitter.com/kNruhcRzE1
— ज़िन्दगी गुलज़ार है ! (@Gulzar_sahab) November 25, 2022
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)