சுத்தி ஃபுல்லா ஆளுங்க.. அது நடுவுல LOVE PROPOSE பண்ண நபர்.. கடைசியில் பெண் வைத்த ட்விஸ்ட்.. வைரலாகும் 'வீடியோ'!!
முகப்பு > செய்திகள் > உலகம்சர்ப்ரைஸாக நம் மனதுக்கு பிடித்தமான ஒருவரிடம் தங்களின் காதலை வெளிப்படுத்த வேண்டி பலரும் முயற்சி மேற்கொள்வார்கள்.

அதுவும் குறிப்பாக, ஆள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில், தங்களின் நண்பராக இருந்து வரும் நபருக்கோ, அல்லது அடிக்கடி கண்டு பழக்கமுள்ள நபருக்கோ வித்தியாசமாக Love Proposal-களை திட்டமிட்டு, அதனை வெளிப்படுத்தவும் செய்வார்கள்.
சமீபத்தில் கூட, சென்னை மற்றும் பெங்களூர் அணிகள், ஐபிஎல் போட்டிகள் மோதிய போது, ஆர்சிபி ரசிகை ஒருவர், தன்னுடைய காதலனுக்கு மைதானத்தில் வைத்து காதலை வெளிப்படுத்த, அதனை அந்த ரசிகரும் ஏற்றுக் கொள்கிறார்.
ஆள் கூட்டத்தில் லவ் ப்ரபோசல்
அங்கு சுற்றி இருந்த நபர்கள், அவர் காதலை ஏற்றதும் ஆர்ப்பரித்துத் தள்ள, இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அதிகம் வைரலாகி இருந்தது. இப்படி, ஒருவர் எதிர்பாராத நேரத்தில், திடீரென அவரிடம் காதலை வெளிப்படுத்தி, இன்ப அதிர்ச்சிக்குள் ஆக்கும் பல வீடியோக்களை நாம் பார்த்திருப்போம்..
அந்த வரிசையில், புதிதாக வெளியாகியுள்ள 'Love Proposal' வீடியோ ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. ஆனால், இந்த வீடியோவின் இறுதி தான், மிகப்பெரிய ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது. தென் ஆப்பிரிக்காவின் ஜொகான்ஸ்பர்க்கில் உள்ள மெக்டொனால்டு உணவகத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படும் நிலையில், வீடியோவில் வரும் நபர் தன்னுடைய காதலை அங்கிருந்த பெண்ணிடம் வெளிப்படுத்துகிறார்.
நம்ப முடியாமல் நின்ற பெண்
கேஷ் கவுண்டரில் அந்த பெண் நிற்க, பின்னால் நின்ற நபர், மோதிரத்துடன் நின்று கொண்டிருந்தார். இதனைக் கண்டதும் அந்த பெண் ஒன்றும் நம்ப முடியாமல் மீண்டும் அங்கிருந்த பெண் பணியாளரை பார்க்கிறார். அப்போது, அங்கு சுற்றி இருந்த வாடிக்கையாளர்கள், அந்த நபருக்கு கரகோஷம் எழுப்பி ஆதரவு தெரிவிக்கின்றனர்.
இதற்கு மத்தியில், மீண்டும் திரும்பிய அந்த பெண், காதலுக்கு மறுப்பு தெரிவித்து, அந்த ஆணிடம் ஏதோ பேசுகிறார். தொடர்ந்து, சில வினாடிகளில் அந்த பெண் கோபத்தில் அங்கிருந்து கிளம்பிச் செல்ல, அந்த காதலனும் அங்கிருந்து ஏமாற்றத்துடன் கிளம்பிச் செல்கிறார். இந்த வீடியோ தற்போது அதிகம் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்களின் கருத்துக்களைக் குறிப்பிட்டு வருகின்றனர்.
Witnessed such a sad situation today yoh 💔 pic.twitter.com/RPFvMS7bga
— ⭐️Certified Fixer⭐️ (@Madame_Fossette) April 27, 2022
இன்னொரு பக்கம், இந்த வீடியோ ஏதேனும் 'prank' பெயரில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
