'காஷ்மீர் வேண்டாம், விராட் கோலியை கொடுங்கள்'... 'பாகிஸ்தான் ரசிகர்களின் வைரல் போட்டோ'... உண்மை என்ன?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jun 19, 2019 03:28 PM

காஷ்மீர் வேண்டாம், விராட் கோலியை கொடுங்கள் என்று பாகிஸ்தான் இளைஞர்கள் போராடுவது போன்று, சமூக வலைதளங்களில் வைரலான டிவிட்டர் பதிவு போலியானது என்று தெரியவந்துள்ளது.

Did Pak Cricket Fans Say \'We Don\'t Want Kashmir, Give Us Virat Kohli\'?

இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெறும் கிரிக்கெட் போட்டி எப்போதுமே வெறும் விளையாட்டாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. மாறாக காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இரு நாடுகளிடையே நிலவும் அரசியல் அழுத்தங்கள், வார்த்தை போர் என பல விவாகாரங்களில் அது எதிரொலிக்கும். தற்போது அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த உலகக்கோப்பை லீக் ஆட்டத்திலும் இதன் தாக்கம் இருந்தது.

பாகிஸ்தான் அணி வீரர்களே இந்தியாவின் வெற்றியை பாராட்டிய நிலையில், 'எங்களுக்கு காஷ்மீர் வேண்டாம், விராட் கோலியை கொடுங்கள்' என்ற வாசகம் அடங்கிய பேனரை வைத்துக் கொண்டு, பாகிஸ்தான் இளைஞர்கள் போராடுவது போன்ற ஒரு புகைப்படத்தை டிவிட்டரில் ஒருவர் பதிவிட்டிருந்தார். அதற்கு பலரும் ரீ ட்வீட் செய்து வந்தனர். இந்நிலையில் அந்த புகைப்படம் போட்டோஷாப் செய்யப்பட்ட போலியான படம் என்று தெரியவந்துள்ளது.

அதாவது அந்த புகைப்படம், 2016 ஆகஸ்ட் மாதம் வெளியான 'இந்தியா டுடே' கட்டுரையில் இடம்பெற்ற போட்டோ என்பது தெரியவந்துள்ளது. ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் கமாண்டர் புர்ஹான் வானியின் மரணத்தை தொடர்ந்து, காஷ்மீர் இளைஞர் ஒருவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஸ்லோகன்களை எழுப்பிய போது எடுத்த புகைப்படமாகும்.

அதனை தற்போது போட்டோஷாப் செய்து நெட்டிசன்கள், சமூக வலைதளங்களில் வைரலாக்கினர். இதே போல் பல்வேறு போட்டிகளின்போதும் ஹர்திக் பாண்டியா, எம்.எஸ். தோனி ஆகியோரை வைத்து பேனர் வைரலானது குறிப்பிடத்தக்கது.