'எங்ககிட்ட நல்ல நட்பு இருக்கு'... 'அதனால அவரே வந்தா நல்லா இருக்கும்'... விராட் கோலி விருப்பம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jul 29, 2019 07:55 PM

இந்தியாவின் புதிய தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் வந்தால் மகிழ்ச்சியடைவேன் என பத்திரிகையாளர் சந்திப்பில் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

Will be happy with Ravi Shastri continuing as coach

உலகக் கோப்பை தொடர் முடிவடைந்த பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர், பேட்டிங் மற்றும் பவுலிங் பயிற்சியாளர்கள் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது. இதற்கிடையில் உடனடியாக மேற்கிந்திய தீவுகளுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதால் 45 நாட்களுக்கு தற்போதிருக்கும் பயிற்சியாளர்களின் பதவிக்காலத்தை பிசிசிஐ நீட்டித்தது. கபில் தேவ் தலைமையிலான தேர்வுக்குழு புதிய பயிற்சியாளர்களை ஆலோசித்து தேர்வு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு செல்வதற்கு முன்பாக பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார் கேப்டன் விராட் கோலி. அதில் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் கலந்து கொண்டார். இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு யார் வருவார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த விராட் கோலி, 'இந்திய அணியின் கிரிக்கெட் ஆலோசனை குழு அது குறித்து முடிவு செய்யும். அவர்கள் இதுவரை என்னிடம் எந்த ஒரு விருப்பத்தையும் கேட்கவில்லை. அவர்கள் கேட்டால் நிச்சயம் என்னுடைய முடிவு குறித்து நான் பேசுவேன்’ என்றார்.

மேலும், ‘எனது தனிப்பட்ட முறையில், ரவி சாஸ்திரி மீண்டும் இந்தப் பதவிக்கு வந்தால் நன்றாக இருக்கும். நானும் அவரும் அணியின் முன்னேற்றம் குறித்தும், இக்கட்டான சூழலில் முடிவு குறித்தும் நிறைய பகிர்ந்திருக்கிறோம். நல்ல நட்புடன் செயல்பட்டு வருகிறோம். நான் மட்டுமல்ல மற்ற வீரர்களும் ரவிசாஸ்திரி உடன் நல்ல அணுகுமுறையில் உள்ளனர். இது குறித்து நான் பேசுவதற்கு வேறொன்றுமில்லை. விரைவில் விண்ணப்பங்கள் பொருத்து பயிற்சியாளர் தேர்வு குழு முடிவு செய்யும்’ என்றார்.

Tags : #VIRATKOHLI #RAVISHASHTRI #HEADCOACH