'சப்பாத்தி தின்ற தந்தை, மகன் மரணம்...' 'விசாரணையில நடந்த டுவிஸ்ட்...' 'திடீர்னு வந்த மந்திரவாதி...' 'கடைசியில போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்...' - உச்சக்கட்ட பயங்கரம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்தியப்பிரதேசத்தின் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி மகேந்திர திரிபாதி மற்றும் அவரின் மகன் மர்மமான முறையில் இறந்த வழக்கில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் பேதுல் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியான 56 வயது மகேந்திர திரிபாதி என்பவரும் அவரின் மகன் அபியன்ராஜ் (33) கடந்த சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில், ஜூன் கடந்த 20ஆம் தேதி இரவு உணவு சாப்பிடும் போது, நீதிபதி மகேந்திர திரிபாதி மற்றும் மகன் அபியன்ரா மட்டும் சப்பாத்தி சாப்பிட்டு உள்ளதாகவும், நீதிபதியின் மனைவி மட்டும் சப்பாத்தி சாப்பிடாமல் வேறு உணவருந்தியுள்ளார் என கூறுகின்றனர்.
இந்நிலையில் சப்பாத்தி சாப்பிட்ட சிறிது நேரத்தில் நீதிபதி மற்றும் அவரது மகன் ஆகியோருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி தந்தையும் மகனும் அடுத்தடுத்த நாள் உயிரிழந்துள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் நீதிபதி மற்றும் அவரின் மகனது பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவரும் வரை காத்திருந்தனர். இந்நிலையில் தற்போது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர்கள் சாப்பிட்ட சப்பாத்தியில் விஷம் கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டது.
அடுத்த கட்டமாக இந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் திருப்புமுனையாக பெண் மந்திரவாதி ஒருவர் மற்றும் 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணையில் பல அதிர்ச்சிகர சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
குற்றவாளிகள் அளித்த வாக்குமூலத்தில், நீதிபதி மகேந்திர திரிபாதி, சந்தியா சிங் என்ற பெண் மந்திரவாதியிடம் தன் குடும்ப கஷ்டங்கள் எல்லாம் நீங்க வேண்டும் என ஆசி கேட்டுள்ளார். தான் செய்யும் பூஜைகளை செய்தால் வீட்டு கஷ்டங்கள் எல்லாம் சரி ஆகி விடும் என சொன்ன அந்த பெண் மந்திரவாதி கடந்த 20ஆம் தேதியன்று கோதுமை மாவை கொடுத்து வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிடுமாறு கூறியுள்ளார். அதில் விஷம் கலந்திருப்பது தெரியாமல், அன்றைய தினமே அதனை சமைத்து சப்பாத்தியாக சாப்பிட்டுள்ளனர் நீதிபதி மற்றும் அவரது மகன்.
இதன் காரணமாகத்தான் நீதிபதி மற்றும் அவரின் மகன் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
