"ஒயின் ஷாப் மூடி 10 நாளாச்சுன்னு"... 'குரூப்'பா சேந்து சானிடைசர குடிச்சுருக்காங்க... 'பத்து' பேர் உயிரை மொத்தமாக பலி வாங்கிய 'சோகம்'!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Jul 31, 2020 04:38 PM

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் கொரோனா பரவல் அதிகமாக இருந்த காரணத்தினால், கடந்த பத்து நாட்களாக அங்குள்ள மதுபானக்கடைகள் செயல்பட தடை செய்யப்பட்டிருந்தது.

andhra pradesh people died after consuming sanitizer as alcohol

இந்நிலையில், மதுப்பழக்கத்திற்கு அடிமையான அப்பகுதியை சேர்ந்த சிலர், மதுபானம் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்ததால், அதற்கு மாற்றாக கையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் சானிடைசர்களை ஒன்றாக சேர்ந்து குடித்துள்ளனர். இதில் கோவிலில் உள்ள மூன்று யாசகர்களும் அடக்கம். இவர்கள் அனைவருக்கும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்ட நிலையில் உடனடியாக அனைவரையும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன் இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், முதல் நாளில் ஒருவர் உயிரிழந்தார். தொடர்ந்து நேற்று மூன்று பேர் உயிரிழந்த நிலையில், மீதமுள்ள நபர்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று 6 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். இதில் ஒருவர், நாட்டு சாராயத்துடன் சானிடைசரை கலந்து குடித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், வேறு யாரவது இதே அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரா எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Andhra pradesh people died after consuming sanitizer as alcohol | India News.