'பாத்ரூமில் இறந்து கிடந்த மகள்...' 'போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் தெரிய வந்த அதிர வைக்கும் உண்மை...' - அம்மா வீட்டில் நடந்த பயங்கரம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருமணமாகி இரு மாதங்களே ஆன நிலையில் இளம்பெண் அம்மா வீட்டில் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![Kanchipuram girl killed strangled neck bathroom mother house Kanchipuram girl killed strangled neck bathroom mother house](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/kanchipuram-girl-killed-strangled-neck-bathroom-mother-house-1.jpg)
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் பகுதியில் இயங்கும் தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றி வருபவர் 46 வயதான பாலாஜி. இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், 23 வயதில் செந்தாரகை என்ற மகளும் உள்ளனர். தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிந்து வரும் பாலாஜி பல்வேறு கல்வெட்டு ஆராய்ச்சிகளையும் செய்து வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த மே மாதம் 24-ம் தேதி மகள் செந்தாரகைக்கும் அதே உத்தரமேரூர் நரசிங்கத் தெருவைச் சேர்ந்த யுவராஜ் (26) என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்து கணவருடன் வண்டலூரில் இருந்த செந்தாரகை கடந்த ஜூன் மாதம் அம்மா வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 8-ம் தேதி மர்மமான முறையில் செந்தாரகை வீட்டில் குளியலறையில் இறந்து கிடந்துள்ளார். தற்போது போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்டில் கழுத்து நெரிக்கப்பட்டது தெரிய வந்திருப்பதால் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)