'வீட்ல 1 கோடி ரூபாய் இருக்கு...' எப்படி ஆட்டைய போடுறது...? 'காதலனுடன் சேர்ந்து சிறுமி போட்ட மாஸ்டர் ப்ளான்...' - சினிமாவை மிஞ்சிய சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியா19 வயது சிறுமி தன் காதலருடன் சேர்ந்து தன்னை கடத்தி விட்டதாக நாடகமாடி 1 கோடி கேட்டு மாட்டிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் எட்டா மாவட்டத்தில், நாக்லா பஜ்னா என்னும் கிராமத்தில் 19 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த இளைஞரும் சுமார் 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் ரூ.1 கோடிக்கு பள்ளி ஒன்றை கட்டுவதாக ஆலோசித்து வந்துள்ளனர். இதையறிந்த சிறுமியும் அவரது காதலரும் இந்த ஒரு கோடி ரூபாயை எப்படியாவது கைப்பற்றி வீட்டை விட்டு சென்று தனியே வாழ நினைத்துள்ளனர்.
இதையடுத்து கடந்த வியாழன் இரவு சிறுமி தீடீரென மாயமாய் மறைந்துள்ளார். மேலும் மகளை காணவில்லை என சிறுமியின் பெற்றோர் மஹாரா காவல்துறையில் புகார் அளித்திருந்தனர். சிறுமியின் பெற்றோர் தொழிலதிபராக இருக்கவே, சிறுமியை அவரின் போட்டியாளர்கள் யாரேனும் கடத்தினார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்க தொடங்கினர்.
இதையடுத்து தனது பெற்றோருக்கு சிறுமியே பல்வேறு எண்களில் இருந்து போன் செய்து 1 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார். பணம் சீக்கிரம் வேண்டுமென அடிக்கடி போன் செய்து நீண்ட நேரம் பேசியுள்ளார். இதனை அறிந்த போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு, செல்போன் சிக்னலை ஆராய்ந்ததில் ஒரே இடத்தில் இருந்து அதுவும் சிறுமியின் வீட்டின் 100 மீட்டர் இடைவெளியில் போன் வந்தது தெரியவந்தது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று, சிறுமி இருக்கும் இடத்திற்கு போலீசார் விரைந்துள்ளார். ஆனால் சிறுமியின் காதலன் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளார். மேலும் அவரைப் பிடிக்க போலீஸ் முயற்சிகள் நடந்து வருவதாக காவல் கண்காணிப்பாளர் (குற்றம்) ராகுல் குமார் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
