'வா தல...வா தல'... 'டீம்ல இருக்குறோமோ இல்லையோ'...'நீ கெத்து பா'...பாராட்டிய நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | May 29, 2019 02:01 PM

வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி போட்டியின் போது,இந்திய இளம் வீரர் ரிஷப் பண்ட் தனது ஆதரவை தெரிவித்து பதிவிட்ட ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

Rishabh Pant wishes Team India uck ahead of ICC World Cup 2019

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நாளை தொடங்க இருக்கிறது.மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள்,சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது. இதற்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி,பயிற்சி ஆட்டத்தில்,நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணியினை எதிர்கொண்டது.இதன் முதல் போட்டியில் நியூசிலாந்திடம் இந்திய அணி தோல்வியுற்றது.

இதனிடையே நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியும் பங்களாதேஷும் மோதின.இந்த போட்டியில் இந்திய அணி அபாரமான வெற்றியினை பெற்றது.தோனி மற்றும் ராகுல் அதிரடியாக விளையாடினார்கள். இதனிடையே இருவரின் ஆட்டத்தை பார்த்த ரிஷ்ப் பண்ட், வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,''நாட்டுக்காக விளையாடும் உணர்வுக்கு இணையாக வேறு எந்த உணர்வும் நெருங்கக்கூட முடியாது. இதே வேகத்தில் சென்று கோப்பையை கொண்டு வர வாழ்த்துக்கள்''என அதில் குறிப்பிட்டுள்ளார்.

உலகக்கோப்பைக்கான வீரர்களின் பட்டியலில் ரிஷ்ப் பண்ட் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,அவருக்கு இடம் கிடைக்கவில்லை.இருப்பினும் நாட்டுக்காக வாழ்த்திய ரிஷப் பண்டை நெட்டிசன்கள் புகழ்ந்து வருகிறார்கள்.