'டெல்லிக்கு' காத்திருக்கும் 'ஆபத்து...' '48 மணி நேரம் எச்சரிக்கை...' 'குர்கான்' வரை நெருங்கிவிட்டதாக 'அதிர்ச்சித் தகவல்...'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Jun 27, 2020 05:00 PM

வட மாநிலங்களின் பல்வேறு மாநிலங்களில் அசரடித்த வெட்டுக்கிளிகள் தற்போது டெல்லியின் புறநகர்ப் பகுதியான குருகிராமை (குர்கான்) நெருங்கிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Locusts approaching Delhi warned 48 hours of danger

கொரோனா பரவல் தொற்றைக் கையாள முடியாமல் உலக நாடுகள் திக்குமுக்காடிக் கொண்டிருக்க, அடுத்தப் பிரச்னையாக வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்தியாவில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் வேகமாகப் பரவிப் படையெடுத்தது. விவசாயிகளும் அதனை விரட்ட முடியாமல் திணறி வந்தனர். கடந்த சில வாரங்களாக வெட்டுக்கிளிகள் தாக்கம் குறைந்த நிலையில், இப்போது டெல்லியின் புறநகர்ப் பகுதியான குருகிராமில் வெட்டுக்கிளிகள் கூட்டம் தென்பட்டதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த வெட்டுக்கிளிகள் படையெடுப்பைக் கட்டுப்படுத்த ஹரியானா மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இது குறித்து டைம்ஸ் நவ் இணையதளம் வெளியிட்ட தகவலின்படி டெல்லி - ஹரியானா மாநிலங்களில் மழை மற்றும் கடுமையான காற்று வீசி வருவதால் வெட்டுக்கிளிகள் தங்களது பாதையை மாற்றியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் டெல்லிக்கு 48 மணி நேரம் எச்சரிக்கை கொடுக்கப்பட்டு இருக்கிறது. வெட்டுக்கிளிகளை ஒழிப்பதற்கான பூச்சிக்கொல்லி மருந்துகளும் தயார் நிலையில் வைத்திருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. நிச்சயமாக இந்த வெட்டுக்கிளிகள் இனி இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பாலைவனப் பகுதிகளை நோக்கி திசை திருப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Locusts approaching Delhi warned 48 hours of danger | India News.