"இதே எண்ணத்தோட நடந்துகிட்டீங்கனா... எங்க பதிலடி உக்கிரமா இருக்கும்!".. பொறுமையை மீறி பொங்கி எழுந்த தென் கொரியா!
முகப்பு > செய்திகள் > உலகம்அமைதியை சீர்குலைக்கும் வகையில் வடகொரியா நடந்துகொண்டால், தங்களின் பதிலடி மோசமாக இருக்கு என தென் கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகொரிய எல்லையில் இரு நாட்டுக்கும் பொதுவான அலுவலகத்தை கிம் ஜாங் அரசு, தகர்த்துள்ள நிலைட்யில், தென் கொரியா தனது ராணுவ டாங்கிகளை எல்லையில் குவித்துள்ளது. கொரோனா பரவலை அடுத்து பரமாரிப்பின்றி காணப்பட்ட இருநாட்டுக்கும் இடையேயான தொடர்பு அலுவலகத்தைத் தான் வடகொரியா இவ்வாறு தகர்த்துள்ளது.
சமீப நாட்களாக வடகொரியா தென் கொரியாவை கடுமையாக மிரட்டி வந்ததோடு, இனி தென் கொரியா எதிரி நாடு என்றும், அந்த நாட்டுடன் எந்த உறவும் இல்லை என்றும் கிம் பகிரங்கமாக அறிவித்தார். இதனால் தென்கொரியா எல்லை மீறிச் செல்வதாகவும், இனி பேசியும் அறிக்கை விட்டும் பிரயோஜனமில்லை, ராணுவத்தை இறக்கிவிட வேண்டியதுதான் என கிம்மின் சகோதரி எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில், எல்லையில் அமைந்துள்ள அலுவலகம் தகர்க்கப்பட்டுள்ளதை வடகொரிய அதிகாரிகள் தரப்பும் உறுதி செய்துள்ளது. அதன் பின்னரே தென் கொரியா தமது தங்கள் எல்லையில் ராணுவ டாங்கிகளை குவித்துள்ளது.
அதுமட்டுமல்லாது, அந்த அலுவலகம் தகர்க்கப்பட்ட பின்னர், தென் கொரிய அரசாங்கம் ஜனாதிபதி மாளிகையான ப்ளூ ஹவுஸ் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தை நடத்தியதுடன், இனி தங்கள் நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் வடகொரியா நடந்துகொண்டால், அதற்கு தங்களது பதிலடி மிகவும் மோசமாக இருக்கும் என அதிகாரிகள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.